- Advertisement -
Homeபொழுதுபோக்குவந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு - கபாலி ரஜினி ஸ்டைலில் மீண்டும் வந்த...

வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு – கபாலி ரஜினி ஸ்டைலில் மீண்டும் வந்த நடிகை அனுஷ்கா – எப்படி இருந்த இவங்க இப்படி ஆயிட்டாங்க?

- Advertisement -

நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர். சுந்தர் சி இயக்கத்தில் ரெண்டு படத்தில் மாதவன் ஜோடியாக நடித்த அனுஷ்கா அடுத்து அருந்ததி படத்தில் நடித்த பிறகு, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்தடுத்த படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த லிங்கா, நடிகர் விஜயுடன் வேட்டைக்காரன், நடிகர் சூர்யாவுடன் சிங்கம், நடிகர் கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், அஜீத்குமாருடன் என்னை அறிந்தால், பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன்பிறகு பாகுபலி படத்தில் நடித்து, மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

- Advertisement -

குறிப்பாக அந்த படத்தில் பாகுபலி மனைவியாக தேவசேனை என்ற கேரக்டரில், பிரபாஸ் ஜோடியாக அனுஷ்கா நடிப்பு வேற லெவலில் இருந்தது. குறிப்பாக அவர் ராஜமாதா கேரக்டரில் நடித்த ரம்யாகிருஷ்ணனை எதிர்த்து பேசிய காட்சிகள் பெரிய அளவில் படத்தில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் ஆர்யாவுடன் நடித்தார் அனுஷ்கா. இந்த படத்தில் உடல் பருமன் உள்ள கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதற்காக உடல் எடையை அனுஷ்கா அதிகரித்தார். ஆனால் அவரால் பிறகு உடல் எடையை குறைக்கவே முடியவில்லை. பலவிதமான உடற்பயிற்சிகள், உணவு கட்டுப்பாடு முறைகளை பின்பற்றியும் பருமனாக இருந்த அவரை யாருமே படங்களில் நடிக்க அழைக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் மீண்டும் பழையபடி தோற்றத்துக்கு வந்துவிட்டார் அனுஷ்கா. அதாவது அவர் அருந்ததி, வேட்டைக்காரன், சிங்கம் படங்களில் நடித்த போது எப்படி இருந்தாரோ, என அதே போன்ற தோற்றத்தில் மீண்டும் நடிக்க வந்துவிட்டார். மலையாளத்தில் கதனர் என்ற படத்தில் மீண்டும் நடிப்பு பயணத்தை துவங்கியிருக்கிறார் அனுஷ்கா.

ரோஜின் தாமஸ் இயக்கும் கதனர் படத்தில், நெகடிவ் ரோலில் அனுஷ்கா நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இதுதவிர தமிழிலும் சில படங்களில் அனுஷ்கா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கபாலி ஸ்டைலில், திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்கிற ஸ்டைலில், அழகிய தோற்றத்தில் காணப்படுகிறார் அனுஷ்கா.

- Advertisement -

சற்று முன்