தமிழக சட்டசபை தேர்தல் தேதி வரும் ஏப்ரல் 23ம் தேதி என அறிவிக்கப்பட்டு விட்டது. வழக்கத்தை விட இந்த முறை தமிழக சட்டசபை தேர்தல் களம் பலத்த பரபரப்புடன் காணப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர் விஜய்தான் அதற்கு காரணம். நடிகர் விஜய் தமிழகத்தின் முதல்வர் ஆவாரா என்ற கேள்விக்கு வரும் மே 4ம் தேதி பதில் கிடைத்து விடும்.
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தவெக உள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராக உள்ள நிலையில் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையும் தற்போது பரபரப்பு மிகுந்ததாக மாறியுள்ளது. கரூர் சம்பவத்தின் போது தவெக கட்சி ஆட்டம் முடிந்தது என்று கடும் விமர்சனம் எழுந்த நிலையில் மீண்டும் களத்துக்கு வந்துவிட்டார் விஜய்.
இந்த நேரத்தில் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா கடந்த பிப்ரவரி 27ம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு தாக்கல் செய்தார். அந்த மனுவில் சங்கீதா, எனது கணவர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார். அதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து கேட்பதாக மனுவில் சங்கீதா கோரி இருந்தார்.
இது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஜய் திரிஷா இருவரும் ஒரே காரில் ஒரே நிற உடையில் ஜோடியாக தயாரிப்பாளர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்றது இன்னும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வருகிற ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு, தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் வெளியானதுமே தவெக கட்சி தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் அப்செட்டாகி விட்டனர். ஏனென்றால் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு ஏப்ரல் 20ம் தேதி செங்கல்பட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. அதாவது வாக்குப்பதிவுக்கு 3 நாட்களுக்கு முன்பே இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் விஜய்க்கு டென்ஷன் என்று ரசிகர்கள் புலம்புகின்றனர்.
அத்துடன் மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படும். அந்த மே 4ம் தேதி இன்னும் ஒரு முக்கியமான நாளாகும். மே 4ம் தேதி அன்று நடிகை திரிஷாவின் பிறந்த நாள். ஏப்ரல் 20ம் தேதி கோர்ட்டில் விவாகரத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு மே 4ம் தேதி தேர்தல் முடிவு, அதே நாளில் திரிஷாவின் பிறந்தநாள் என விஜய்க்கு அடுத்தடுத்து சவாலான விஷயங்கள் தொடர்ந்து வருகின்றன. இவை அனைத்தையும் விஜய் தாக்குப்பிடிப்பாரா, தமிழக முதல்வர் ஆவாரா என்று தவெக கட்சியினர் புலம்புகின்றனர்.





