- Advertisement -
Homeபொழுதுபோக்குதன்னைவிட 7 வயது குறைந்த நடிகருடன் நடிக்க சம்மதித்த நயன்தாரா - அதுக்கு இப்படி ஒரு...

தன்னைவிட 7 வயது குறைந்த நடிகருடன் நடிக்க சம்மதித்த நயன்தாரா – அதுக்கு இப்படி ஒரு காரணமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர் தற்போது இவர் மட்டுமே. வழக்கமாக திருமணத்துக்கு பிறகு குடும்பத்துடன் செட்டில் ஆகி விடும் நடிகைகளுக்கு மத்தியில் இவர் மட்டுமே வாடகைத் தாய் மூலம் பிள்ளைகளை பெற்றுக்கொண்டு, சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஒரு படத்துக்கு ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கும் நயன்தாரா ஸ்கின் கேர்9 என்ற பெயரில் பியூட்டிகேர் திங்க்ஸ் பிஸினஸ், மார்க்கெட்டிங் அண்ட் சேல்ஸ் செய்து வருகிறார். இதில் பெண்களுக்கான சானிடரி நாப்கின் சேல்ஸ் முக்கிய அங்கம் வகிக்கிறது. நாடு முழுவதும் இந்த பிஸ்னஸை விரிவுபடுத்தி இருக்கிறார்.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக படங்களை இயக்கவே வாய்ப்பின்றி முடங்கியிருந்த நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், இப்போதுதான் எல்ஐசி என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து, பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக போட்டு அந்த படத்தை இயக்கி வருகிறார். இதில் முதலில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது, ஆனால் விலகி விட்டார். ஆனால் இயக்குநர் சீமான் இதில் நடிக்கிறார்.

பாலிவுட்டில் கால் பதிக்க விரும்பி, ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் நயன்தாரா கிளாமர் காட்டி நடித்தார். படத்தை அட்லி இயக்கியிருந்தார். அந்த படத்தில் நடித்ததற்கு, முகேஷ் அம்பானி வீட்டில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு மட்டுமே நயன்தாராவுக்கு கிடைத்தது. மற்ற பட இந்தி பட வாய்ப்புகள் எதுவும் கதவை தட்டவில்லை.

- Advertisement -

இதற்கிடையே அன்னபூரணி படமும் எதிர்பார்த்த வெற்றியை தராமல் ஏமாற்றி விட்டது. அதில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனங்கள், காட்சிகளால் இறுதியில் நயன்தாரா அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. இந்த படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிட்டு விட்டு, பின்பு நீக்கியது எல்லாம் நயன்தாராவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக போய் விட்டது. இந்த சூழலில், அருண் காமராஜ் இயக்கும் ஒரு படத்தில் கமிட் ஆன நயன்தாரா, கதை பிடிக்கவில்லை என அந்த படத்தை விட்டும் வெளியேறினார்.

இப்படி தொடர்ச்சியான தோல்வி, கமிட் ஆன படங்களில் இருந்து வெளியேற்றம் என மனச்சோர்வடைந்த நிலையில் இருக்கும் நயன்தாரா, தற்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அதனால் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில், நடிகர் கவினுடன் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். நயன்தாராவை விட கவின் 7 வயது சின்னவர் என்றாலும், ரொமான்ஸ் செய்வதில் தப்பில்லை. படவாய்ப்பு முக்கியம் என்ற நிலையில் ஒத்துக்கொண்டு இருக்கிறார் நயன்தாரா.

- Advertisement -

சற்று முன்