- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ்ல ஜெயிச்சதுக்கு பதிலா, நான் சினிமாவில் ஹீரோயினா நடிச்சிருப்பேன் - அதிரடி பதில் சொன்ன டைட்டில்...

பிக்பாஸ்ல ஜெயிச்சதுக்கு பதிலா, நான் சினிமாவில் ஹீரோயினா நடிச்சிருப்பேன் – அதிரடி பதில் சொன்ன டைட்டில் வின்னர் அர்ச்சனா

- Advertisement -

ராஜா ராணி 2 சீரியலில் நடித்து மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர் அர்ச்சனா. அதில் மாமியாராக நடித்திருக்கும் பிரவீனாவிடம், அடிக்கடி சிக்கிக் கொள்வார் மருமகளாக நடித்த அர்ச்சனா. அண்ணன், தம்பி இருவரில், தம்பிக்கு மனைவியாக நடித்த அர்ச்சனா குடும்பத்தில் ஏதேனும் பிரச்னைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில் விஜய் டிவியில் இந்தமுறை நடந்த பிக்பாஸ் சீசன் 7ல் ஒயில்டு கார்டு போட்டியாளராக வீட்டுக்குள் வந்தார். ஆரம்பத்தில் இருந்தே சக போட்டியாளர்களின் தவறுகளை, குறைகளை சுட்டிக்காட்டி பேசினார். அதனால் வீட்டுக்குள் பலரும் அர்ச்சனாவுடன் சண்டை போட்டனர்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் வீட்டுக்குள் இருந்த நிக்சன், அர்ச்சனாவை மிக கடுமையான வார்த்தைகளில் திட்டி கேவலமாக பேசினார். இனிமே பேசினா சொருகிடுவேன் என்று கூறி, பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், கமல்ஹாசன் அவரை எச்சரித்து விட்டுவிட்டார்.

இந்த சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு கட்டம் வரை, இந்த முறை விசித்ரா தான் டைட்டில் வின்னர் என பலரும் பேசிய வந்தனர். டைட்டில் வின்னராக அவருக்கு மட்டுமே தகுதியுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், அவர் வெளியேற்றப்பட்டார். திடீரென ஒயில்டு கார்டில் அர்ச்சனா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

அர்ச்சனா, உண்மையில் 19 கோடி ஓட்டுகள் வாங்கி வெற்றி பெறவில்லை. பிஆர் மூலம் போலியான ஓட்டுகளை வாங்கித்தான் வெற்றி பெற்றார் என பலரது மத்தியில் விமர்சனங்கள் எழுந்தது. இதுகுறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்து அர்ச்சனா சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

பிஆர் மூலம் நான் ஓட்டுகளை வாங்கியிருந்தால் ஒரு ஓட்டுக்கு ஒரு ரூபாய் என்றால் கூட இதற்காக 19 கோடி ரூபாய் நான் தரணும். சரி ஒரு கோடி ஓட்டு என்றாலும் கூட ஒரு கோடி ரூபாய் தரவேண்டும். அதற்கு, நான் ஒரு கோடி ரூபாயில் சின்ன பட்ஜெட் படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்திருப்பேன். நான் பிஆர் மூலமாக ஜெயிக்கலே, பிஆர் என்கிற பப்ளிக் ரெஸ்பான்ஸ் மூலமாக தான் ஜெயித்தேன் என்று, அர்ச்சனா அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்