சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கும் இந்த திரைப்படத்தில் வில்லனாக வருகிறார் ரவி மோகன். அதர்வா ஸ்ரீ லீலா உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். அண்மையில் வெளியான படத்தின் டைட்டில் டீசர் அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.
இந்த திரைப்படம் 1965 ஆம் காலகட்டங்களில் எடுக்கப்படுவது போல படமாக்கப்படுகிறது. இதில் கல்லூரி மாணவர்கள் கெட்டப்பில் நட்சத்திரங்கள் வருகிறார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்து இந்த திரைப்படம் படமாக்கப்பட்டு வருவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. முதலில் சென்னையில் இதன் படப்பிடிப்பை சுதா கொங்கரா நடத்தினார்.
பிறகு சிதம்பரத்தில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. காரைக்குடியைத் தொடர்ந்து அடுத்ததாக இலங்கையில் படத்தின் சூட்டிங் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இது ஜிவி பிரகாசிற்கு நூறாவது திரைப்படம் என்பதால் இசையும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் நடுவே ஏ ஆர் முருகதாஸின் படத்திலும் கவனம் செலுத்த இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இருவரும் இணைந்திருக்கும் திரைப்படத்திற்கு மதராசி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் சூட்டிங் கடந்த ஆண்டு, ஜூன் ஜூலை மாதத்திலேயே தொடங்கப்பட்ட நிலையில் இன்னும் அது முடிவடையவில்லை. இந்த படத்தை இயக்கும்போதே சல்மான் கானை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார் முருகதாஸ். இதனால் பாதியில் அந்தப் படத்திற்கு சென்று விட்டார்.
இதன் காரணமாக மதராசி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இன்னும் எடுக்க வேண்டி இருக்கிறதாம். அனேகமாக, பராசக்தி திரைப்படத்தை முடித்து விட்ட பிறகு மதராசிக்கு சிவகார்த்திகேயன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த திரைப்படம் எந்த சமயத்தில் வெளியாகும் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.
இது ஒரு பக்கம் இருக்க தனது அடுத்த திரைப்படத்திற்கான பணிகளிலும் சிவகார்த்திகேயன் கவனம் செலுத்தி வருகிறாராம். ஏற்கனவே லோகேஷ் கனகராஜை சந்தித்து இது குறித்து அவர் பேசியிருக்கிறார். தற்போது இயக்குனர் அட்லியையும் சந்தித்து, படம் எடுப்பது தொடர்பாக சிவகார்த்திகேயன் பேசி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. தற்போது அட்லி அல்லு அர்ஜுனுடன் படம் எடுக்கும் சூழலில் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணையலாம் என்று திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.





