- Advertisement -
Homeபொழுதுபோக்குடூரிஸ்ட் ஃபேமிலி படம் குறித்து அந்த படத்தின் இயக்குனரிடமே விமர்சித்து பேசிய ஆட்டோ டிரைவர் -...

டூரிஸ்ட் ஃபேமிலி படம் குறித்து அந்த படத்தின் இயக்குனரிடமே விமர்சித்து பேசிய ஆட்டோ டிரைவர் – கடைசியில் நடந்ததுதான் பெரிய டிவிஸ்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் எப்போதுமே ஜெயித்து விடுகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம் டூரிஸ்ட் ஃபேமிலி. 24 வயதான இளம் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்குனராக அறிமுகமான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தில் சசிகுமார் சிம்ரன் உள்ளிட்டோர் சிறப்பாக நடித்திருந்தனர்.

இந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பார்த்த நடிகர்கள் ரஜினி சூர்யா தெலுங்கு நடிகர் நானி மற்றும் இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட பலரும் அபிஷன் ஜீவிந்தை மனதார பாராட்டினார்கள். நடிகர் சசிகுமாருடன் சிம்ரன் யோகிபாபு எம்எஸ் பாஸ்கர் மிதுன் ஜெய்சங்கர் கமலேஷ் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் 80 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் சாதனை புரிந்தது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த ஜூன் 2ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெளியானது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் வெளியானது. இந்த படத்துக்கு ஓடிடி தளத்திலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் ஆட்டோ ஒன்றில் பயணித்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அந்த பதிவில் அபிஷன் ஜீவிந்த் கூறியதாவது, முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு எனது சொந்த ஊருக்கு ஆட்டோவில் நான் சென்றேன். அப்போது ஆட்டோக்கார அண்ணன் முகை மழை என்ற பாடலை அவரது யூடியூப்பில் எதேச்சையாக வைத்தார். உடனே என் முகம் மலர்ந்து. நான் அவரிடம் இந்த படம் உங்களுக்கு பிடித்ததா என்று கேட்டேன்.அந்த அண்ணா சிறிதும் தயக்கமே இல்லாமல், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை 3 முறை தியேட்டரில் பார்த்தேன் என்று கூறினார்.

- Advertisement -

அவரது கையை காட்டி இதோ பாருங்க, இப்போது அந்த படத்தை பற்றி பேசினாலும் புல்லரிக்கிறது. அந்த அளவுக்கு அந்த படம் பிடிக்கும் என்று கூறினார். படத்தில் சசிகுமார் சார் கேரக்டருடன் எப்படி ஒன்ற முடிந்தது என்றும் எனக்கு கூறினார். அவரது சொந்த தந்தை குடும்பத்திற்காக கடினமாக உழைத்தார் என்றும் கூறினார். அவரது தந்தை இறந்து விட்டதால் இந்த படம் அவருக்கு பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்ததாக கூறி பேசும்போதே உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.

நான்தான் இந்த படத்தின் இயக்குனர் என்று நான் அவரிடம் கூறியதும் மிகவும் மகிழ்ச்சியடைந்து, படத்தின் மீதான அன்பை என் மீது வெளிக்காட்டினார். என்ன ஒரு தருணம், நம்முடைய சிறிய பங்களிப்பினால் அடுத்தவர்கள் சிரிப்பது மன மாறுதலை ஆறுதல் அடைவதை உணரும் போது அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை என்று அந்த டிரைவருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அபிஷன் ஜீவிந்த் பதிவை செய்திருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்