தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான தனுஷ் கோலிவுட்டை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து விட்டார். தற்போதைய நிலையில் பேன் இந்தியா ஸ்டாராக பார்க்கப்படும் தனுஷுக்கு இந்தியா முழுவதும் ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது என்றால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு அவரது படங்கள் இந்தியா முழுவதும் வரவேற்பினை பெற்று வசூலிலும் அமர்களப்படுத்தி வருகிறது.

ஏற்கனவே பரபரப்பாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் தனுஷ்க்கு மேலும் சில படங்கள் தற்போது கைவசம் வெயிட்டிங்கில் காத்திருக்கின்றன. தற்போது தனுஷ் நடிப்பில் அடுத்தாக திரைக்கு வர தயாராகியுள்ள படம் “கேப்டன் மில்லர்”. இந்த கேப்டன் மிலருக்கு படத்திற்கு அடுத்து அவர் வேறொரு படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ளார்.
அந்த படத்திற்கு அடுத்து தனுஷின் ஐம்பதாவது படத்தை அவரே இயக்கி நடிக்கவும் இருக்கிறார் என்று கூட தகவல் வெளியாகியது. இப்படி இடைவிடாது அடுத்தடுத்த படங்களில் தனுஷ் பிசியாக நடித்து வந்தாலும் தனது பிட்னஸ் விஷயத்தில் இன்றளவும் மிகவும் கட்டுக்கோப்பாக இருந்து வருகிறார். தனுஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியுள்ள வேளையில் இன்றளவும் முதல் படத்தில் இருந்தது போன்றே இளமையாகவே காட்சியளிக்கிறார்.

இந்நிலையில் தனுஷ் இப்படி பிட்டாக இருப்பதற்கு என்ன காரணம்? என்பது குறித்து பிரபல பாலிவுட் இயக்குனரான பால்கி சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்து 2015-ஆம் ஆண்டு தனுஷ், அக்ஷரா ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோரை வைத்து “ஷமிதாப்” என்கிற படத்தை இயக்கியவர் தான் இந்த பால்கி. அவர் தனுஷ் குறித்து அளித்துள்ள ஒரு கருத்தில் கூறியதாவது : தனுஷிற்கு என்னதான் வயசானாலும் எப்போதும் ஸ்கூல் பையன் மாதிரி தான் இருப்பார்.
அவர் என்னதான் அதிகமாக சாப்பிட்டாலும் ஒரு கிராம் கூட அவரது உடல் எடை கூடாது. ஏனெனில் அவர் அதற்கு ஏற்றார் போல டயட்டை மெயின்டன் செய்கிறார். மாமிச உணர்வுகளை தவிர்த்துள்ள அவர் பழச்சாறுகளையே அதிகமாக உட்கொள்கிறார். மேலும் தனது உடலை பிட்டாகவும், புத்துணர்ச்சியோடு வைத்திருக்க அவர் கடுமையாக உழைத்தும் வருகிறார். அதன் காரணமாகவே அவர் சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகளாகியும் இன்றளவும் அவரது உடல்வாகு அப்படியே மாறாமல் இருக்கிறது என பால்கி பேசியது குறிப்பிடத்தக்கது.





