- Advertisement -
Homeபொழுதுபோக்குவெளிநாட்டுல போய் சினிமா படிச்சவர்ன்னு சொன்னாங்க, இப்படி அரைத்த புளித்த மாவு படத்தை ஜேசன் சஞ்சய்...

வெளிநாட்டுல போய் சினிமா படிச்சவர்ன்னு சொன்னாங்க, இப்படி அரைத்த புளித்த மாவு படத்தை ஜேசன் சஞ்சய் எடுத்திருக்காரே? – சிக்மா படத்தை கடுமையாக விமர்சித்த பிரபலம்!

- Advertisement -

முன்னாள் நடிகர் இன்னாள் தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை முதன்முறையாக இயக்கி டைரக்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் நேற்று வெளியானது. இந்த படம் குறித்து திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, தாத்தா எஸ்ஏ சந்திரசேகர் அளவுக்கு கூட ஜேசன் சஞ்சய் புதிய கதைக்களத்துடன் படம் பண்ணாமல் டைரக்டராக அறிமுகமாவதற்கு ஏதோ ஒரு பழைய கதையை தேர்வு செய்து பழைய பாணியிலேயே இயக்கி படமாக்கி உள்ள படம்தான் சிக்மா. வெளிநாட்டுக்கு சென்று சினிமாவை எல்லாம் ஜேசன் சஞ்சய் கற்றுக் கொண்டார் என்று சொன்னார்கள்.

- Advertisement -

அவரிடம் வித்தியாசமான படத்தை எதிர்பார்த்து காத்திருந்தால் அதே அரைத்த புளித்த மாவையே மீண்டும் கிண்டி கொண்டு வந்திருக்கிறார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. தவறான பாதையை தேர்வு செய்து விட்டால் கடைசி வரை அது எப்படி சரியாக இருக்கும்? அடுத்த படத்திலாவது நல்ல கதை மற்றும் திரைக்கதையை ஜேசன் சஞ்சய் தேர்வு செய்து இயக்க வேண்டும்.

பாழடைந்த நூலகத்தை அப்பா வாங்கிய கடன் காரணமாக வில்லன் ஆட்கள் அபகரிக்க பார்க்க அதை காப்பாற்ற போராடும் ஹீரோவுக்கு 1000 கோடி வால்ட் உள்ள லாக்கரின் சாவி கிடைக்கிறது. அந்த பணத்தை கைப்பற்றி தனது நூலகத்தை கடனிலிருந்து மீட்டாரா இல்லையா என்பதுதான் சிக்மா படத்தின் கதை. ஆனால் கதை மற்றும் திரைக்கதையில் எந்த ஒரு சுவாரசியமும் இல்லாமல் உள்ள நிலையில் படமும் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விட்டது.

- Advertisement -

40 வருஷத்துக்கு முன்னாடி சட்டம் ஒரு இருட்டறை படத்தை ஜேசன் சஞ்சயின் தாத்தா எஸ் ஏ சந்திரசேகர் இயக்கினார். அந்தப் படத்தின் கதை என்னன்னா சட்டத்தின் ஓட்டைகளை வைத்து தப்பிக்கும் குற்றவாளிகளை அதே சட்டத்தின் ஓட்டைகளை வைத்து தண்டிக்கும் ஹீரோவின் கதைதான். அப்படி ஏதாவது ஐடியாவாக புதுசாக ஜேசன் சஞ்சய் பண்ணுவார் என்று பார்த்தால் பழைய கதையை பழைய ஸ்டைலில் படமாக்கி வைத்திருக்கிறார். ஒரு சரியான பாதையை தேர்வு செய்து பயணித்தால் தான் அந்தப் பாதை வெற்றியை தேடித் தரும்.

சஞ்சய் பண்ணின பெரிய தப்பே தவறான கதையை தேர்வு செய்து அதற்கு இன்னமும் தவறான திரைக்கதையை வைத்ததுதான். சேசிங் மேட்சிங் எல்லாம் நல்லா இருந்தாலும் அதற்கான கிரெடிட் ஸ்டண்ட் மாஸ்டருக்கும் கேமரா மேனுக்கும் தான் செல்லும். படம் ஐடியாவாக சிறப்பாக இருந்தால் இருந்தால் தான் இயக்குனரை பாராட்ட முடியும். அடுத்தபடத்தில் பயிற்சியும் முயற்சியும் இன்னமும் அதிகம் தேவை என்று ப்ளு சட்டை மாறன் சிக்மா படம் குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்