- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதெல்லாம் பனையூர் பண்ணையார் கண்ணுக்கு தெரியலையா? வாயை திறங்க ப்ரோ - தவெக தலைவர் விஜயை...

இதெல்லாம் பனையூர் பண்ணையார் கண்ணுக்கு தெரியலையா? வாயை திறங்க ப்ரோ – தவெக தலைவர் விஜயை பங்கமாக விமர்சித்த பிரபலம்!

- Advertisement -

சினிமா நடிகராக இருந்து கடந்த ஓராண்டாக அரசியல்வாதியாக மாறிவிட்ட நடிகர் விஜய்க்கு பல தரப்பில் இருந்து ஆதரவும் கிடைத்து வருகிறது. பல இடங்களில் இருந்து எதிர்ப்பும் கிடைத்து வருகிறது. சமீபமாக நடிகர் விஜய் மத்தியில் ஆளும் பாஜக குறித்தும், மாநிலத்தில் ஆளும் திமுக குறித்தும் காரசாரமாக விமர்சித்து பேசி வருகிறார்.

அதுவும் திமுகவும் பாஜகவும் ரகசிய கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருவதாகவும் தேர்தல் கூட்டணிக்கு காங்கிரஸ் உடன் இணைந்த திமுக, இப்போது ஆட்சி அதிகாரம் பணத்துக்காக பாஜகவுடன் ரகசிய கூட்டணி அமைத்து செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி சமீபத்தில் பேசியிருந்தார். இது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் வைரலானது.

- Advertisement -

இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், நடிகர் விஜய் நடித்த படங்களை விமர்சித்து வந்த அவர், சமீபகாலமாக விஜயின் அரசியல் நடவடிகைகள் குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தற்போது அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, ரெண்டு பேரும் ரகசிய கூட்டணி வச்சு நாடகம் போடறாங்க என திமுக பாஜக குறித்து கொக்கரித்தார் விஜய்.

ஆனால் இபிஎஸ் செங்கோட்டையன் டெல்லி செல்கிறார்கள். அமித்ஷாவை சந்திக்கிறார்கள். அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகிறது. வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து வாக்கு வாக்களித்துள்ளார் ஒரே ஒரு குருக்கள் ஜி கே வாசன். வாக்கெடுப்பை புறக்கணித்து எஸ்கேப் ஆனார் அன்புமணி. வாக்கெடுப்பு நடந்த நாளில் டெல்லி சென்ற இளையராஜா வாக்களித்தாரா இல்லையா என்பது மர்மமாக உள்ளது.

- Advertisement -

இஸ்லாமியர்களை பாதிக்கும் இந்த மசோதாவை எதிர்த்து வாக்களிப்பதில் இவர்களுக்கு என்ன சிக்கல்? தமிழக மக்களிடம் கெட்ட பெயர் வரக்கூடாது என்னும் இரட்டை வேடம்தானே இது? இன்று சென்னையில் நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்ததாக செய்தி வந்துள்ளது. இதில் ஒன்று கூட பனையூர் பண்ணையாரின் கண்களுக்கு தெரியவில்லையா? இவர்களெல்லாம் போடும் நாடகத்திற்கு என்ன பெயர்? மைக் முன்பு தொண்டை கிழிய கத்துபவர் இப்போது ஏன் அமைதியாக இருக்கிறார்?

இவர்கள் எல்லாம் உங்கள் தீம் பார்ட்னர்கள் என்பதால் தானே? பெரிய சிஐடி சங்கர், ரகசிய கூட்டணியை கண்டுபிடித்து ஊருக்கு சொல்றாராம். இப்ப வாயை திறங்க ப்ரோ… என்று ப்ளு சட்டை மாறன் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பி உள்ளார். இவரது இந்த பதிவு பலரது மத்தியில் பெரிய கவனத்தைப் பெற்றுள்ளது. மேலும் இந்த பதிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

- Advertisement -

சற்று முன்