- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் நாடாளுமன்றம் சென்றால், முதலில் அதைத்தான் தூக்குவேன்- நடிகர் மன்சூர் அலிகான் பேச்சால் தலை...

நான் நாடாளுமன்றம் சென்றால், முதலில் அதைத்தான் தூக்குவேன்- நடிகர் மன்சூர் அலிகான் பேச்சால் தலை கிறுகிறுத்துப் போன பொதுமக்கள்!

- Advertisement -

நடிகர் மன்சூர் அலிகான், தமிழ் சினிமாவில் 35 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறார். கேப்டன் பிரபாகரன் படத்தில் வீரபத்ரன் என்ற கேரக்டரில் அவரை வில்லனாக அறிமுகப்படுத்தினார் நடிகர் விஜயகாந்த். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் வில்லனாக, கதாநாயகனாக, காமெடி, குணச்சித்திரம் என ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக இப்போதும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் லியோ படத்தில் திரிஷா உடன் நடித்தது குறித்து விளையாட்டாக மன்சூர் அலிகான் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திரை பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மன்சூர் அலிகான் மீது போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யும் அளவுக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. பிறகு கோர்ட், கேஸ் என அந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்தது.

- Advertisement -

இதற்கிடையே இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை சமீபத்தில் துவங்கிய நடிகர் மன்சூர் அலிகான், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்கான அவர் வேலூர் தொகுதியில் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், எனக்கு யாரும் வந்து பிரசாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. நானே ஜெயித்து விடுவேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும் செய்தியாளர்களிடம் மன்சூர் அலிகான் கூறியதாவது, திமுக அதிமுக காங்கிரஸ் என மாறி மாறி ஆட்சி நடத்தியும் தமிழ்நாடு முன்னேறவில்லை. மோடி நடத்துவது நாடக தேர்தலாக இருக்கிறது. மோடி எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டு தான் தேர்தலை நடத்துகிறார். இதையே நான் முதலில் இருந்து சொல்லிக்கொண்டு இருக்கிறேன். ஆளுனர், ஆளுனர் பதவி இது தேவையில்லாத ஒன்றுதான்.

- Advertisement -

என்னை பொருத்தவரை ஏ டு இசட் நான்தான். யாரும் எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நான்தான் கண்டிப்பாக ஜெயிப்பேன். இங்கு எல்லோருடைய ஓட்டுகளும் எனக்குதான் கிடைக்கப் போகிறது. வெற்றிக்காக மக்களை குழப்பி விடுவார்கள். அந்த வேலை எல்லாம் தேர்தல் நேரத்தில் நடக்கும். வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

இதுவரை ஓட்டு மெஷினை பத்தி யாருமே பேசவில்லை. அதுதான் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நான் தனி ஒரு ஆளாக நாடாளுமன்றம் சென்று வாக்கு சீட்டு மூலம் தேர்தலை நடத்தச் சொல்லுவேன். ஓட்டு மெஷினை தூக்கச் சொல்லி போராட்டம் நடத்துவேன். இதுவரை யாருமே இதற்காக போராட்டம் நடத்தவில்லை. அது ஏன் எனத் தெரியவில்லை. இது ஒரு போலியான ஜனநாயகம், ஏமாற்று வேலையாக தெரிகிறது என்று மன்சூர் அலிகான் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்