- Advertisement -
Homeபொழுதுபோக்குதிரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல், நம்ம கே பாக்யராஜ் அணியில் போட்டியிடும் இயக்குனர் சேரன்,...

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல், நம்ம கே பாக்யராஜ் அணியில் போட்டியிடும் இயக்குனர் சேரன், பிகேபி – எதிரணியில் நிற்பவர்கள் யார்?

- Advertisement -

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த சங்கத்தின் தலைவராக இருந்த இயக்குனர் கே பாக்யராஜ் சமீபத்தில் மறைந்த நிலையில் இப்போது புதிய நிர்வாகிகள் தேர்தல் நடக்க உள்ளது. தலைவராக பாக்யராஜ் இருந்தபோதே அவருக்கு எதிராக ஒரு சிலர் செயல்பட்ட நிலையில் பாக்யராஜ் அதனால் கடும் மனக்கும் மன உளைச்சலில் தவித்தார் என்றும் கூறப்படுகிறது.

ஏனென்றால் அவர் ஒரு சிறந்த நிர்வாகியாக எழுத்தாளர் சங்கத் தலைவராக செயல்பட்ட நிலையில் அவருக்கு எதிராக சிலர் செயல்பட்டது அவரது பதவியை மீண்டும் தொடர விடாமல் தடுக்க முயன்றது பாக்யராஜூக்கு உண்மையிலேயே மிகப்பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்தியது. பாக்யராஜ் மறைந்த நிலையில் தற்போது இந்த சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற 19ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இதில் நம்ம கே பாக்யராஜ் அணி என்ற பெயரில் தலைவர் பதவிக்கு இயக்குனர் சேரன் போட்டியிடுகிறார். பொதுச் செயலாளர் பதவிக்கு எழுத்தாளர் மற்றும் கதை வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் பொருளாளர் பதவிக்கு ஆர் சுந்தர்ராஜன் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு சமுத்திரக்கனி கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

மேலும் 4 இணை செயலாளர் பதவிக்கு பாஸ்கர் சக்தி கேபி ஜெகன் நவீன் செல்வ பாரதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். 12 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு அனுமோகன் பழனி பாரதி சாய் ரமணி செந்தில் நாதன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். வருகிற 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை வடபழனியில் உள்ள திரை இசை கலைஞர்கள் சங்க அரங்கத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த தேர்தல் நடைபெற உள்ளது.

- Advertisement -

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்த கே பாக்யராஜ் மறைந்த நிலையில் அவருடைய அணி சார்பில் போட்டியிடும் சேரன் பட்டுக்கோட்டை பிரபாகர் ஆர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட அந்த அணிக்கு இந்த வெற்றியை தந்துவிட வேண்டும். மற்றவர்கள் எதிர்த்து போட்டியிடுவது நியாயம் இல்லை என்று ஒரு விமர்சனம் எழுந்து வருகிறது. ஏனென்றால் பாக்யராஜ் சமீபத்தில் தான் மறைந்தார்.

கே பாக்யராஜ் பெயரிலேயே ஒரு அணி போட்டியிடும் போது அவர்களை வரவேற்று கெளரவிக்கும் விதமாக மற்ற அணி எதிர்த்து நிற்காமல் அவர்களை ஜெயிக்க வைப்பதே நியாயம் என்று கூறப்படுகிறது. எனினும் பாக்யராஜ் இருந்தபோதே அவரை தலைவர் பதவிக்கு மீண்டும் வரவிடக்கூடாது என்று நினைத்த சிலர் கே பாக்யராஜ் அணிக்கு எதிராக போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. விரைவில் அவர்கள் யார் யார் என்பது தெரிய வரும்.

- Advertisement -

சற்று முன்