- Advertisement -
Homeபொழுதுபோக்குஎங்களை நம்ப வைத்து 4 ஆண்டுகளாக ஏமாற்றுகிறார், அறம் பட இயக்குனர் கோபி நயினார் மீது...

எங்களை நம்ப வைத்து 4 ஆண்டுகளாக ஏமாற்றுகிறார், அறம் பட இயக்குனர் கோபி நயினார் மீது உதவி இயக்குனர் பரபரப்பு புகார்!

- Advertisement -

இன்றைய மனித வாழ்க்கையில் எல்லா துறைகளிலும் சூழ்ச்சி ஏமாற்றம் நம்பிக்கை மோசடி துரோகம் என்பது மலிந்து விட்டது. குடும்பங்களிலும் கூட உறவுகளில் இதுபோன்ற நம்பிக்கை துரோகங்கள் ஏமாற்றங்கள் அதிகரித்து விட்டன. அரசியலில் அரசு நிர்வாகத்தில் அதிகார வர்க்கத்தில் மோசடிகளுக்கும் துரோகங்களுக்கும் பஞ்சமே இல்லாத நிலையில், சினிமாவிலும் அது பல காலமாக நீடிக்கவே செய்கிறது.

ஒரு காலத்தில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படம் வெளியான போது, இது என்னுடைய கதை. ஏஆர் முருகதாஸ் என்னிடம் கதையை கேட்டுவிட்டு அவரது கதை போல கத்தி படத்தை எடுத்துவிட்டார் என, அவரிடம் உதவி இயக்குனராக பணிசெய்த கோபி நயினார் புகார் எழுப்பினார். ஆனால் ஏஆர் முருகதாஸ் அதை எல்லாம் பொருட்படுத்தவில்லை.

- Advertisement -

எனினும் அடுத்ததாக கோபி நயினார் நடிகை நயன்தாரா நடித்த அறம் என்ற படத்தை இயக்கினார். மூடப்படாத ஆழ்குழாய் கிணறுக்குள் தவறி விழும் சிறுமியை காப்பாற்ற நடக்கும் போராட்டங்களே இந்த படத்தின் கதை. இதில் அரசியல்வாதிகள் குறுக்கீடு அரசு நிர்வாகத்தின் மெத்தனம் போன்றவற்றை இயக்குனர் அழகாக சுட்டிக்காட்டியிருப்பார்.

அறம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இப்போது மனுஷி என்ற படத்தை இயக்குனர் நயினார் கோபி டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். மனுஷி படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்த நிலையில், இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் கோபி நயினார் குறித்து அவரிடம் உதவி இயக்குனராக பணிசெய்த திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியை சேர்ந்த ராஜ்கமல் என்பவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்கமல் கூறியதாவது, படிப்பை முடித்த பிறகு கடந்த 2018ம் ஆண்டில் இயக்குனர் கோபி நயினாரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தேன். கடந்த 3 ஆண்டுகளாக அவர் சம்பளம் தரவில்லை.

எனக்கும் என்னுடன் பணிபுரிந்த 4 பேருக்கும் இந்த பிரச்சனை இருந்தது. கேட்டால் திருமணத்திற்கு ஏதாவது பெரிதாக செய்கிறேன். இல்லையென்றால் படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடி என்று எல்லோருக்கும் போலியான ஆசை வார்த்தைகளை கூறினார். தொடர்ச்சியாக இதேபோல் ஏமாற்றப்பட்டு கொண்டே வந்தோம். பணம் போனால் போகட்டும். அது எனக்கு வேண்டாம். நிம்மதியாக வாழ விடுங்கள் என்று சொன்னால் வாழ விடமாட்டேன் என்கிறார் என்று ராஜ்கமல் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்