- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி சோதனைக்கு மேல் சோதனையா? விஜய் படத்துக்கு அடுக்கடுக்காய் தொடரும் சிக்கல் - சோலிய முடிச்சிடுவாங்களோ…...

இப்படி சோதனைக்கு மேல் சோதனையா? விஜய் படத்துக்கு அடுக்கடுக்காய் தொடரும் சிக்கல் – சோலிய முடிச்சிடுவாங்களோ… என்ற பரிதவிப்பில் தயாரிப்பு நிறுவனம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நடிகர் விஜய் தனது 69வது படம் ஜனநாயகன் படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரி 9ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக தமிழக அரசியல் களத்தில் வலம் வரும் விஜய்க்கு இப்போது மிக மோசமான ஒரு சோதனை காலமாக மாறிவிட்டது.

அரசியல் களத்தில் விறுவிறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் சென்ற அவரது பயணத்தில் கரூரில் ஏற்பட்ட துயர சம்பவம் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 பெண்கள் 18 பெண்கள் உட்பட 41 பேர் பலியான சம்பவம் பெரிய பாதிப்பை கட்சிக்கு ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்க்கும் தீராத களங்கத்தை தந்துள்ளது.

- Advertisement -

இந்த சம்பவத்தில் நடிகர் விஜய் நேரடியாக குற்றவாளி இல்லை என்றாலும் அவரை பார்க்க வந்த பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு தராமல் கடமை தவறிவிட்டதாகவே மக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. பொறுப்பில்லாத கட்சி நிர்வாகிகளும் கட்டுப்பாடில்லாத கட்சி தொண்டர்களின் கூட்டமும் இதற்கான சில காரணங்களில் ஒன்றாகவும் பேசப்படுகிறது.

கரூரில் நடந்த துயர சம்பவம் காரணமாக ஜனநாயகன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விஜய் பாடிய பாடல் இன்று வெளியாக இருந்த நிலையில் அந்த பாடல் வெளியீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வருகிற டிசம்பரில் மலேசியாவில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தவும் திட்டமிடப்பட்டு இருந்தது. இப்போது அதுவும் நடப்பதற்கான வாய்ப்பில்லை என்ற தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது.

- Advertisement -

ஏற்கனவே பகிரங்கமாக திமுக பாஜக கட்சிகளை நடிகர் விஜய் எதிர்த்த நிலையில் ஜனநாயகன் படத்துக்கு அவர்களால் பலத்த நெருக்கடி ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ஏனெனில் ரெட்ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான பராசக்தி படமும் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ரிலீஸாகும் அதே பொங்கல் பண்டிகைக்குதான் ரிலீஸாகிறது.

அத்துடன் பான் இந்தியா ஸ்டார் நடிகராக மாறியுள்ள தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்த தி ராஜா சாப் படமும் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ரிலீஸாகும் அதே நாளில் வருகிற ஜனவரி 9ம் தேதிக்கு ரிலீஸாகிறது. இதனால் தெலுங்கானா ஆந்திரா மற்றும் ஓவர்சீஸ் நாடுகளில் ஜனநாயகன் படத்துக்கு எதிர்பார்த்த எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைப்பதும் கஷ்டம். இப்படி தொழில் ரீதியாக அரசியல் ரீதியாக பல சிக்கல்களும் சோதனைகளும் ஜனநாயகன் படத்துக்கு தொடர்வதால், அந்த படத்தை தயாரித்துள்ள கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் பலத்த கவலையில் உள்ளது.

- Advertisement -

சற்று முன்