- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி ஒரு போஸ் தந்தபடி அதைப்பத்தி அட்வைஸ் பண்ணலாமா? பிக்பாஸ் ஓவியாவுக்கு குவியும் கண்டனங்கள் -...

இப்படி ஒரு போஸ் தந்தபடி அதைப்பத்தி அட்வைஸ் பண்ணலாமா? பிக்பாஸ் ஓவியாவுக்கு குவியும் கண்டனங்கள் – என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா…

- Advertisement -

நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகையாக இருக்கிறார். இருப்பினும் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வகையில், அனைத்து தரப்பு மக்களின் கவனம் ஈர்த்த ஒரு பிக்பாஸ் போட்டியாளராக மாறினார். ஓவியா ஆர்மி துவங்கும் அளவுக்கு பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரலானார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, சென்னை கடற்கரையில் வித்யாசமான கோஷங்களை எழுப்பி அதன்மூலம் வைரலானவர் ஜூலி. நர்ஸ்சாக பணிபுரிந்த அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் ஓவியாவுக்கும், ஜூலிக்கும் ஏற்பட்ட ஒரு பிரச்னையில், குறும்படம் காட்டப்பட்டது.

அதில் ஓவியா உண்மையை பேசியிருக்கிறார், ஜூலி பொய் சொல்லி இருக்கிறார் என்பது நிரூபணமான நிலையில், ஓவியா புகழ் பெரிய அளவில் ரீச் ஆனது. அதன் காரணமாக, ஓவியா ஆர்மி சமூக வலைதளங்களில் உருவாகி பெரிய அளவில் அவருக்கு இமேஜ் ஏற்படுத்தி கொடுத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஓவியா.

எனினும் சினிமாவில் பெரிய அளவில் ஓவியாவுக்கு வரவேற்பு இல்லாத நிலையில், சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் ஓவியா. மெரினா, கலகலப்பு, மதயானை கூட்டம், மன்மதன் அம்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்த நிலையில், விளம்பரங்களிலும் நடிக்கிறார் ஓவியா.

இப்போதெல்லாம் நடிக்க வாய்ப்பில்லாத பல நடிகைகள், தங்களது நடிப்பாற்றலை, நடனத் திறமையை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், எக்ஸ் பக்கத்திலும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதனால் வண்ணத் திரையில் அவர்களை காண முடியாத ரசிகர்கள், தங்களது ஆண்ட்ராய்டு மொபைல் போன் திரைகளில், தினமும் பலமுறை காண முடிகிறது.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடிப்பழக்கம் தீங்கானது என்று அறிவுறுத்தி, அருகில் மதுபானம் இருக்கும் டம்ளருடன், சிக்கன் பீஸ் எடுத்து கடித்தபடி போஸ் தந்த தனது புகைப்படத்தை ஓவியா அப்டேட் செய்திருக்கிறார். எப்படியேனும் தனக்கான ஒரு கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு வில்லங்கமான புகைப்படத்தை ஓவியா வெளியிட வேண்டுமா என, ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

சற்று முன்