விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து அறிமுகமானவர் நடிகர் கவின். தொடர்ந்து வேலைக்காரன் உள்ளிட்ட சில சீரியல்களில் அவர் நடித்தார். அதன்பிறகு விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துக்கொண்டார். மக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார்.
பிக்பாஸ் வீட்டுக்குள், இலங்கையை சேர்ந்த போட்டியாளர் லாஸ்லியாவிடம் காதல் வசனங்கள் பேசி, அவரையே சுற்றி சுற்றி வந்தார். ஒரு கட்டத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் பலரும் கவினை விமர்சித்து பேசத் துவங்கி விட்டனர். ஒரு கட்டத்துக்கு பிறகு லாஸ்லியாவும், கவினுடன் இணைந்து வீட்டுக்குள் காதலில் ஈடுபட்டதும், இதை லாஸ்லியாவின் பெற்றோர் வீட்டுக்குள் வந்து கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கவினின் நண்பராக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த பிரதீப் ஆண்டனி, கவினை கன்னத்தில் ஓங்கி அறைந்தது வைரலானது. அவர்தான், கடந்தாண்டில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருந்து ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவங்களை தொடர்ந்து சினிமாவில் பிஸியான நடிகர் கவின் டாடா, லிப்ட், ஸ்டார் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் டாடா படம் பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. லிப்ட் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. ஸ்டார் படத்திலும் கவின் நடிப்பு பாராட்டப்பட்டது.
சினிமாவில் வளர்ந்து வரும் கவின், எதிர்காலத்தில் சிவகார்த்திகேயன் போல ஒரு முன்னணி நடிகராக மாறுவார் என்று கூறப்படும் நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் நடந்துக்கொள்ளும் விதம் படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைக்கிறது. சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரை இன்சல்ட் செய்யும் விதமாக கவின் நடந்துக்கொண்டது வைரலானது.
இப்போது மார்க்கர் என்ற படத்தில் கவின் நடித்து வருகிறார். இந்த படத்தை விகடன் அசோக் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார். வெற்றிமாறன் படத் தயாரிப்பு பேனரில், வெற்றிமாறனின் மேனேஜர் சொக்கலிங்கம் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படப்பிடிப்பில் நடித்து வரும் கவின், படத்தின் இயக்குனர் வைத்த ஒரு ஷாட்டை பார்த்து, என்னய்யா ஷாட் வெச்சிருக்கே? என்று சத்தமாக கெட்ட வார்த்தையில் பேசியிருக்கிறார். இதைக்கேட்டு அங்கிருந்த படக்குழுவினர் அதிர்ந்து போயுள்ளனர். இப்படியா ஒரு வளரும் நடிகர் பொதுவெளியில் பலபேர் முன்னிலையில் பேசுவது என, கடும் அதிருப்தியில் உள்ளனர்.





