தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இப்போது அரசியல்வாதியாக தமிழக வெற்றிக் கழகம் தலைவராக இருக்கிறார். இப்போது தனது 69வது படம் ஜனநாயகன் படத்தில் நடித்த பிறகு, முழுநேர அரசியல்வாதியாக விஜய் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் முழுவீச்சில் செயல்பட உள்ளார்.
நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகும் அதே நேரத்தில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். லைகா புரடக்சன்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தை ஜேசன் சஞ்சய் இயக்குகிறார். இந்த படத்தில் நாயகனாக ராயன் படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் நடித்து வருகிறார்.
இந்த படத்தை இயக்கும் லைகா புரடக்சன்ஸ் நிறுவனம், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய் நடித்த கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பு நிறுவனமாக உள்ளே வந்தது. கார்பரேட் நிறுவனமாக இது தொடர்ந்து பல படங்களை தயாரித்தது. இந்த படங்களும் பெரிய வெற்றிப் படங்களாக இருந்தது.
குறிப்பாக முன்னணி நடிகர்களின் இயக்குனர்களின் படங்களை பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் அதன் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் லைகா புரடக்சன்ஸ் தயாரித்த பல படங்கள் பலத்த தோல்வியை சந்தித்து அந்நிறுவனத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தின.
அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் லால்சலாம் படங்கள் படுதோல்வியை சந்தித்தன. வேட்டையன் படமும் பெரிய வசூலை தரவில்லை. அதே போல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் 2 படமும் படுதோல்வி ஆனது. அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படமும் பிளாப் ஆனது. சந்திரமுகி 2 வந்தா ராஜாவா தான் வருவேன், பொன்னியின் செல்வன் 2 என லைகா புரடக்சன்ஸ் தயாரித்த பெரிய பட்ஜெட் படங்கள் பலவும் தோல்வியடைந்து அந்நிறுவனத்துக்கு தாங்க முடியாத அளவுக்கு நஷ்டம் தந்து ஏமாற்றி விட்டன.
இந்த சூழலில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் லைகா புரடக்சன்ஸ் தயாரிக்கும் படம் பெரிய வெற்றியை தந்து பலத்த நஷ்டத்தில் இருந்து லைகா நிறுவனத்தை மீட்குமா, ரஜினி கமல் அஜீத் போன்ற ஜாம்பவான்களே லைகா நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க முடியாத போது, விஜய் மகன் ஜேசன் சஞ்சய் மீட்டு விடுவாரா என்ற கேள்வி தமிழ் சினிமா வட்டாரத்தில் உலா வருகிறது.





