- Advertisement -
Homeபொழுதுபோக்குகொளுத்தும் 100 டிகிரி வெயிலில்… தளபதி கட்சி மாநாட்டில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள் - ஏலே.....

கொளுத்தும் 100 டிகிரி வெயிலில்… தளபதி கட்சி மாநாட்டில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள் – ஏலே.. மதுரையில் அழகர் திருவிழா இப்பவே வந்துடுச்சா?

- Advertisement -

மதுரையில் உள்ள பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது அரசியல் மாநாடு இன்னும் சற்று நேரத்தில் துவங்க இருக்கிறது. இன்று அதிகாலை 4 மணி முதலே மாநாட்டு திடலுக்கு மக்கள் கூட்டம் சாரை சாரையாக வரத் துவங்கி விட்டது. காலை 9 மணிக்கே பல ஆயிரக்கணக்கான மக்கள் மாநாட்டு திடலில் போடப்பட்டிருந்த சேர்களில் நிரப்பத் துவங்கி விட்டனர்.

காலை 9 மணி முதலே பாரபத்தி பகுதியில் வெயில் சுட்டெரிக்க துவங்கிய நிலையில் 100 டிகிரி வெயில் அங்கு கொளுத்திக் கொண்டிருக்கிறது. அனலாக கொதிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் திரண்டிருக்கும் தவெக கட்சியினரும் தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் விஜயை நேரில் காண ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

நேற்று மாநாட்டு திடலில் அமைக்கப்பட்ட 100 அடி கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததில் ஒரு கார் மட்டுமே சேதமடைந்தது. மற்றபடி அதிர்ஷடவசமாக யாருக்கும் சிறுகாயம் கூட ஏற்படவில்லை. அதே நேரத்தில் அந்த பகுதியில் இப்போது 40 அடி கொடிக்கம்பம் நடப்பட்டு, தவெக கட்சித் தலைவர் விஜய் இன்னும் சற்று நேரத்தில் அங்கு கொடியேற்ற இருக்கிறார்.

பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்தும் வாகனங்களை தடை செய்தும் தவெக மாநாட்டுக்கு வந்த மக்கள் கூட்டத்தை ஆளுங்கட்சி திமுகவால் கட்டுப்படுத்த முடியவில்லை. 5 கிலோ மீட்டருக்கு முன்பே வாகனங்களை பார்க்கிங் செய்தாலும் 5 கிலோ மீட்டர் நடந்தே மாநாட்டு திடலுக்கு மக்கள் நடந்து வந்து விட்டனர்.

- Advertisement -

வாகன வசதி செய்யாமல் குவாட்டர் பிரியாணி தராமல் தலைக்கு 200 ரூபாய் தராமல் இப்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தங்களது சொந்த செலவில் வந்துள்ள லட்சக்கணக்கான மக்கள், விஜயை நேரில் பார்க்க மட்டுமே வந்திருக்க வாய்ப்பில்லை. அவர் மீதான அபிமானமும் அன்பும்தான் இதற்கு காரணம். இல்லை என்றால் இப்படி சுட்டெரிக்கிற வெயிலில் மணிக்கணக்கில் கருக வேண்டிய அவசியம் இல்லை.

மதுரையில் அழகர் விழாவில்தான் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இன்று மதுரையில் நடக்கும் தவெக மாநாடு எங்களை பொருத்த வரை அழகர் திருவிழா தான். இன்னும் சற்று நேரத்தில் அழகர் விஜய் வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று அங்கு திரண்டிருந்த மக்கள் ஆரவாரமாக கூறுகின்றனர். நிச்சயமாக ஆளுங்கட்சிக்கு பலத்த அடி தரும் ஒரு மாநாடாக இது இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் பேசத் துவங்கியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்