- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர் எழுப்பிய கேள்விக்கு, அட்லி பாணியில் பதிலளித்த தமிழ் படம் இயக்குனர்... என்ன இப்படி பங்கமாக...

ரசிகர் எழுப்பிய கேள்விக்கு, அட்லி பாணியில் பதிலளித்த தமிழ் படம் இயக்குனர்… என்ன இப்படி பங்கமாக கலாய்ச்சிட்டாரு என புருவத்தை உயர்த்தும் ரசிகர்கள்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தமிழ் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி எஸ் அமுதன். தொடக்கத்தில் பாடலாசிரியராக இருந்த அவர், பின்பு இயக்குனராக மாறினார். 2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படத்தில், இதுவரை வெளி வராத வித்தியாசமான ஜானரை கையில் எடுத்தார் சி எஸ் அமுதன்.

சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் சிவா, கதாநாயகனாக நடிக்க அவருடன் மனோ பாலா, வெண்ணிற ஆடை மூர்த்தி, எம் எஸ் பாஸ்கர், திஷா பாண்டே, பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் நடித்தனர். இதில், தமிழ் சினிமாவில் அதுவரை வெளியாகி இருந்த அத்தனை திரைப்படத்தையும் விடாமல் கலாய்த்து தள்ளினார் சி எஸ் அமுதன்.

- Advertisement -

படத்தின் ஆரம்பத்திலேயே சினிமா பட்டி என்னும் கிராமத்தை காண்பித்து, அங்கு பிறந்த ஆண் சிசுக்களை கொலை செய்வார்கள் என்று கூறி கருத்தம்மா படத்தை கச்சிதமாக கிண்டல் செய்திருந்தார் இயக்குனர். திரைப்படம் செல்ல செல்ல சிஎஸ் அமுதன் இதுவரை எத்தனை திரைப்படங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு புரியவந்தது.

தமிழ் படம் மட்டுமல்ல அதில் இடம்பெற்ற பாடலும் வித்தியாசமாக தான் எடுக்கப்பட்டது. வரிகளே இல்லாமல் எடுக்கப்பட்ட ஓமகசிய பாடலை பார்த்தும் ரசிகர்கள் வயிறு வலிக்க சிரித்தனர். இந்த திரைப்படத்தின் மூலம் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனது. தயாநிதி அழகிரியும் இந்த படத்தை தயாரித்திருந்தார். வசூலின் மிகப்பெரிய சாதனையை இந்த திரைப்படம் படைக்க, சிஎஸ் அமுதன் பலராலும் பாராட்டப்பட்டார்.

- Advertisement -

இதன்பிறகு இரண்டாவது படம் என்னும் திரைப்படத்தை அவர் இயக்கினார். விமல், ரம்யா நம்பீசன், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம், முழுவதும் முடிக்கப்பட்டு ட்ரெய்லரும் வெளியானது. ஆனால் பல்வேறு சிக்கல் காரணமாக இதுவரை படம் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இதனால் துவண்டு போன சிஎஸ் முதல் அடுத்ததாக தமிழ் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார். இதுவும் ஓரளவு நல்ல விமர்சனத்தை பெற, படம் ஹிட்டானது.

இந்த நிலையில் தற்போது சீரியஸான கதையை இயக்குனர் கையில் எடுத்திருக்கிறார். ரத்தம் என பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஒருவர் சி எஸ் அமுதனிடம், மீண்டும் விஜய் ஆண்டனி உடன் இணைவீர்களா என்று கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த இயக்குனர், எங்க அண்ணனுக்கு நான் தான் செய்வேன் என்று கூறினார். என்ன அட்லியை இப்படி பங்கமாக கலாய்த்து விட்டார் என்ன சிரிக்கும் ரசிகர்கள், சி எஸ் அமுதனின் பதிவிற்கு லைக்ஸ்களை தெளித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்