- Advertisement -
Homeபொழுதுபோக்குஆன்லைன் விமர்சனங்களுக்கு தடை கோரிய நடப்பு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்… - சென்னை கோர்ட் வழங்கிய...

ஆன்லைன் விமர்சனங்களுக்கு தடை கோரிய நடப்பு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்… – சென்னை கோர்ட் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

- Advertisement -

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு புதிய திரைப்படம் சினிமா தியேட்டர்களில் வெளியானால் அந்த படம் குறித்த விமர்சனம் வெளியாவதற்கு ஒரு வாரம் வரை கால அவகாசம் தேவைப்படும். சினிமா வார இதழ்களில் அல்லது தினசரி பத்திரிகைகளில் தான் அந்த படம் குறித்த விமர்சனம் வெளியாகும்.

பெரும்பாலும் பெரிய நடிகர்கள் நடித்த குறிப்பிட்ட படங்களை மட்டுமே இதில் விமர்சனம் செய்வார்கள். மற்ற படங்கள் எல்லாம் படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனத்தை பொறுத்து அந்த படங்களின் வெற்றி தோல்வி அமையும். இதுதான் பல ஆண்டுகளுக்கு முன்பு வரை வழக்கமாக இருந்தது. அதனால் பெரும்பாலான படங்கள் சுமாரான வெற்றியை லாபத்தை பெற்றன.

- Advertisement -

ஆனால் இப்போது டிஜிட்டல் உலகமாக மாறிவிட்ட நிலையில் ஆண்ட்ராய்டு யுகத்தில் ஒரு படம் வெளியாகி முதல் காட்சி முடிவடைவதற்கு முன்பே அந்த படம் குறித்த விமர்சனம் அக்குவேர் ஆணிவேராக இணையங்களில் வைரலாகி விடுகிறது. முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ரசிகனின் மனநிலை தான் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது என்ற நிலை இப்போது உருவாகி இருக்கிறது.

கையில் செல்போன் வைத்திருக்கிற அனைவருமே இப்போது சினிமா விமர்சகர்களாக மாறி இருக்கின்றனர். ஒரு படம் பார்க்கும்போதே அந்த படத்தின் தரம் என்ன, அந்த படம் பார்க்க தகுதியானதா தகுதியற்றதா என்பதை ரசிகர்கள் ஒரு நொடியில் முடிவு செய்து அதை உடனடியாக செல்போன்களில் ஷேர் செய்து அந்த படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானித்து விடுகின்றனர்.

- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கங்குவா படம் வெளியானது. இந்த படத்துக்கு இணையத்தில் மிக மோசமான விமர்சனம் எழுந்தது. படமும் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இதுகுறித்து நடப்பு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து. ஒரு படம் வௌியானதும் ஆன்லைனில் விமர்சனம் செய்வதால் அந்தப் படத்தின் வெற்றி கடுமையாக பாதிக்கிறது. உதாரணமாக கங்குவா படத்தின் மிகப்பெரிய தோல்விக்கு இணையத்தில் வெளியான விமர்சனங்கள் தான் காரணம். எனவே ஒரு புதிய படம் ரிலீஸானால் 3 நாட்களுக்கு ஆன்லைனில் விமர்சனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று நடப்பு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், இதற்கு நீதிபதி வழங்கிய தீர்ப்பில், சினிமா விமர்சனங்கள் குறித்து யாருக்கும் தடை போட முடியாது. செல்போன் வைத்திருக்கிற அனைவருமே தாங்கள் பார்க்கும் திரைப்படங்கள் குறித்து விமர்சிக்கவே செய்வார்கள். நீதி கூறும் நீதிபதிகள் பற்றிக்கூட சிலர் விமர்சிக்க தான் செய்கிறார்கள். இதை எல்லாம் தவிர்க்க முடியாது. அதனால் ஆன்லைனில் வெளியாகும் சினிமா விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று தெள்ளத் தெளிவாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்