- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் பேச்சை மீறி செயல்பட்டாரா நடிகர் டேனியல் பாலாஜி - சில ஆண்டுகளுக்கு முன்...

நடிகர் விஜய் பேச்சை மீறி செயல்பட்டாரா நடிகர் டேனியல் பாலாஜி – சில ஆண்டுகளுக்கு முன் அவரே பகிர்ந்த உண்மை

- Advertisement -

நடிகர் டேனியல் பாலாஜி, தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக ரசிகர்களை மிரட்டியவர். அவர் நடித்த படங்களில் எண்ணிக்கை மிக குறைவுதான் என்றாலும், அந்த படங்களில் அவரை தவிர யார் நடித்திருந்தாலும் அவ்வளவு சிறப்பான நடிப்பை தந்திருக்கவே முடியாது என்று சொல்லும் அளவுக்கு அந்த கேரக்டரில் தன்னை சரியாக பொருத்திக்கொண்டு நடித்தவர்.

இதற்கு மிக சரியான உதாரணமாக கவுதம் மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு படத்தை சொல்லலாம். அந்த படத்தில் அமுதன் என்ற கேரக்டரில் அவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு கொடூர மருத்துவ மாணவனாக அவரது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஒரு கட்டத்தில் மிகப்பெரிய போலீஸ் அதிகாரியான கமல்ஹாசனே அவர்களிடம் உள்ள கொடூர வில்லத்தனத்தையும் வேகத்தையும் கண்டு ஒரு கட்டத்தில் மிரண்டு போய்விடுவார். இறுதியில் ஜோதிகாவை உயிருடன் புதைத்து விட்டதாக டேனியல் பாலாஜி கூறும் காட்சியில் கமலும் பதறிப் போய் விடுவார்.

- Advertisement -

அதே போல் பொல்லாதவன், வடசென்னை, பைரவா, பிகில் என சில படங்களில் தமிழில் நடித்தவர், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் அங்கும் வில்லன் கேரக்டர்தான். இதுவரை மொத்தமாக 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டேனியல் பாலாஜிக்கு 49 வயதான நிலையில், வாழ்க்கை அவருக்கு புல் ஸ்டாப் வைத்துவிட்டது. நேற்று முன்தினம் இரவு, அவர் மாரடைப்பால் காலமாகி விட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன், நடிகர் டேனியல் பாலாஜி ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசியிருக்கிறார். அப்போது பல விஷயங்களை மனம் விட்டு சொல்லி இருக்கிறார். நடிகர் விஜயுடன் அவர் 2 படங்களில் நடித்திருக்கிறார். இயக்குனர் பரதன் இயக்கத்தில் பைரவா. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். மற்றொரு படம் அட்லி இயக்கத்தில் பிகில், இந்த இரண்டு படங்களிலுமே வில்லன் கேரக்டரில்தான் டேனியல் பாலாஜி நடித்திருந்தார்.

- Advertisement -

பைரவா படத்தில் ஜெகபதி பாபு மெயின் வில்லன். நான் அவருடன் இருக்கும் அவர் சொல்லும் வேலையை செய்யும் வில்லன். இந்த படத்தில் ஒரு காட்சியில் நான் மொட்டையடித்துக்கொள்ள வேண்டும் என்று டைரக்டர் பரதன் கூறிவிட்டார். ஆனால் விஜய்க்கு அது பிடிக்கவில்லை. வேண்டாம் அந்த மாதிரி எல்லாம் வேண்டாம். உங்களின் மத்த படங்களை அது பாதிக்கும். டைரக்டரிடம் முடியாது என்று சொல்லி விடுங்கள் என்றார்.

கடைசியில் கூட, டைரக்டரிடம் கட்டாயமாக முடியாது என்று சொல்லிவிடுங்கள் என்றுதான் விஜய் சொன்னார். ஆனால் நீண்ட முடியுடன் இருந்த நான், டைரக்டர் சொல்கிறபடி அந்த காட்சியில் மொட்டையடித்தால்தான் சரியாக வரும் என்பதால், மொட்டையடித்துக் கொண்டேன். அந்த விஷயத்தில் விஜய் பேச்சை மீறி செயல்பட்டு விட்டேன் என்று கூறியிருக்கிறார் டேனியல் பாலாஜி.

- Advertisement -

சற்று முன்