காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் இருந்து பிறகு ஹீரோவாக மாறியவர் நடிகர் சந்தானம். கடந்த 2014ம் ஆண்டில் நடிகர் சந்தானம் முதன் முறையாக நாயகனாக நடித்த படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை வெற்றியை ரசிகர்களிடம் பெற்ற நிலையில் தொடர்ந்து நடிகர் சந்தானம் பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.
அவர் நடித்த தில்லுக்கு துட்டு அக்யூஸ்ட் நெம்பர் 1 வடக்குப்பட்டி ராமசாமி பாரிஸ் ஜெயராஜ் இனிமே இப்படித்தான் டிடி ரிடர்ன்ஸ் ஜிம்கானா என பல படங்கள் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், கடந்த மாதம் மே 16ம் தேதி டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியானது. டெவில் டபுள்ஸ் நெக்ஸ்ட் லெவல் என அழைக்கப்பட்ட இந்த படம் தியேட்டர்களில் பெரிய வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் டிடி ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது. தியேட்டரில் இந்த படத்தை பார்க்காமல் விட்டவர்களும், பார்க்க தவறிய ரசிகர்களும் ஓடிடி தளத்தில் படத்தை பார்க்க ஆர்வம் காட்டினர். ஏனென்றால் நடிகர் சந்தானம் படம் என்றாலே அவர் பேசும் காமெடி பஞ்ச் டயலாக் வேற லெவலில் இருக்கும்.
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் கதைப்படி சந்தானம், ஒரு யூடியூப் சினிமா விமர்சகர். புதிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது அந்த படங்களை பற்றி விமர்சனம் செய்பவர். அங்குள்ள ஒரு மர்மான தியேட்டரில் இதுபோல் சினிமா விமர்சனம் செய்யும் விமர்சகர்களை ஸ்பெஷல் டிக்கெட் அனுப்பி வைத்து தியேட்டருக்குள் வரவழைத்து அவர்களை கொடூரமான கொல்வதுதான் படத்தின் கதை.
இதில் அந்த மர்ம தியேட்டருக்கு வரவழைக்கப்படும் சந்தானம் அவரது அப்பா நிழல்கள் ரவி, அம்மா கஸ்தூரி மற்றும் தங்கை யாஷிகா ஆனந்த் மற்றும் காதலி ஆகியோரை சந்தானம் இறுதிவரை போராடி காப்பாற்றுவதுதான் படத்தின் கதை. இதில் மொட்டை ராஜேந்திரன் கௌதம் மேனன் போன்றவர்களும் நடித்திருக்கின்றனர். சினிமா விமர்சகர்களை கொலை செய்யும் வில்லனாக செல்வராகவன் நடித்திருக்கிறார்.
படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே டிடி நெக்ஸ்ட் லெவல் ரசிகர்களை பதம் பார்த்து விடுகிறது. எரிச்சலூட்டும் திரைக்கதை, காட்சிகள் வசனங்கள் ரசிகர்களை விரக்தியடைய வைக்கின்றன. ஓடிடி தளத்திலேயே 30 நிமிடம் தொடர்ந்து இந்த படத்தை பார்க்க முடியாத நிலையில், தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற ரசிகர்கள், படத்தில் தியேட்டருக்குள் சிக்கிய சந்தானம் குடும்பத்தை விட, இந்த படத்தை பார்க்க வந்த எங்களது நிலமைதான் ரொம்பவும் பரிதாபம், எங்களை காப்பாத்துங்க என்று கதறியபடிதான் படம் முடிந்து வெளியே வந்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.





