- Advertisement -
Homeபொழுதுபோக்கு2 காதல், 2 ஹாரர் படங்கள் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக ரெடி... அப்போ! இந்த வாரம்......

2 காதல், 2 ஹாரர் படங்கள் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக ரெடி… அப்போ! இந்த வாரம்… திரையரங்குகளில் ஆரவாரம் தான்!!…

- Advertisement -

தமிழ் சினிமாவில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்திற்கு பிறகு, கடந்த வாரம் வசந்தபாலனின் அநீதி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றதால், மாவீரனுக்கு தொடர்ந்து கூட்டம் அள்ளியது. இந்த நிலையில், ஜூன் 28ஆம் தேதி தமிழ் சினிமாவில் ஐந்து படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை கதாபாத்திரத்தில் இருந்து கதாநாயகனாக அவதாரம் எடுத்த சந்தானம், தொடர் தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். அவரின் தில்லுக்கு துட்டு திரைப்படம் ஓரளவு வெற்றியை கொடுத்த நிலையில், தற்போது மீண்டும் ஹாரர் திரைப்படங்களை அவர் கையில் எடுத்துள்ளார்.

- Advertisement -

டிடி ரிட்டன்ஸ் என்னும் தலைப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில், சுரபி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரேம் ஆனந்த் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதன் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில், படம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

இதேபோல் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தயாரிப்பில் உருவாகியுள்ள எல்ஜிஎம் திரைப்படமும் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. ஹரிஷ் கல்யாண், நதியா, லவ் டுடே இவானா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை, ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். விட்னஸ் எனும் படத்தை இயக்கி பெரிதும் பாராட்டப்பட்ட இவரின் அடுத்த படைப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

- Advertisement -

மாமியார் மருமகளுக்கு இடையே உள்ள ஈகோவை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. காதலன் குடும்பத்தினரும் காதலி குடும்பத்தினரும் ஒரே வேனில்சுற்றுலா செல்லும்போது என்னவெல்லாம் பிரச்சனை ஏற்படும் என்பதை சுவாரசியமாக இயக்குனர் எடுத்திருப்பது, டிரைலரை பார்க்கும்போதே தெரிவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதேபோல் நடிகர் பரத்தின் 50-வது திரைப்படமாக உருவாகியுள்ள லவ் திரைப்படமும் வெளியாகிறது. மலையாள படத்தின் ரீமைக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் வாணி போஜன் நடித்திருக்கிறார். தனது 50வது படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார் நடிகர் பரத். இதேபோல் வடசென்னையின் மறுபக்கத்தை கண்முன்னே காண்பிக்கும் வகையில், புதுமுக நடிகர்களால் உருவாகி இருக்கும் டைனோசர்ஸ் என்னும் படம் ரிலீஸ் ஆகிறது. மோகன் கோவிந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பீட்சா 3 திரைப்படமும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

- Advertisement -

சற்று முன்