- Advertisement -
Homeபொழுதுபோக்கு10 பாட்டுக்கு இசையமைக்க 800 ரூபாய் வாங்கிய பிரபல இசையமைப்பாளர்- ரஜினி கமல் அஜீத் படங்களுக்கு...

10 பாட்டுக்கு இசையமைக்க 800 ரூபாய் வாங்கிய பிரபல இசையமைப்பாளர்- ரஜினி கமல் அஜீத் படங்களுக்கு இசையமைத்தவராச்சே? – இதென்ன சார் கொடுமையா இருக்குது?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் இளையராஜா போலவே 1990களில் இசைத்துறையில் கொடி கட்டிப் பறந்தவர் தேனிசை தென்றல். அந்த காலகட்டத்தில் வெளியான பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்தவர். இவரது பல பாடல்கள், இளையராஜா இசையில் உருவானவை என்று சொல்லும் அளவுக்கு மிக தரமாக சிறப்பாக இருக்கும்.

நடிகர் தியாகராஜன் மகன் பிரசாந்த் நடிகராக அறிமுகமான படம் வைகாசி பொறந்தாச்சு. இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் அப்போது சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களாக அசத்தின. இந்த படத்தில்தான் தேனிசை தென்றல் தேவா இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது இசையில் வெளியான பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன.

தொடர்ந்து அண்ணாமலை பாட்ஷா அவ்வை சண்முகி சூரியன் வசந்தகால பறவை ஆசை இந்து காதல் கோட்டை தெற்கு தெரு மச்சான் நம்ம ஊரு பூவாத்தா அரண்மனை காவலன் குஷி செந்தூரப்பாண்டி ஏழையின் சிரிப்பில் கட்ட பொம்மன் பொங்கலோ பொங்கல் செல்லக்கண்ணு சோலையம்மா பாஞ்சாலங்குறிச்சி என தேவாவின் சூப்பர் ஹிட் படங்கள் ஏராளமாக உள்ளன.

தேனிசை தென்றல் தேவா இப்போது தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் அடிக்கடி இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். தேவா மிகச்சிறந்த கானா பாடகர். தனது பல படங்களில் அவர் சூப்பர் ஹிட் கானா பாடல்களை பாடியிருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தேவா, என்னுடைய பாடல்களை ரசிகர்கள் ரசித்தாலே போதும், நான் அதற்கு காப்பிரைட் கேட்கவே மாட்டேன் என்றும் உறுதியாக கூறியிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் ஒருவர், இசையமைப்பாளர் தேவாவை நேரில் வந்து சந்தித்து இருக்கிறார். அப்போது அவர், நான் மேல் மருவத்துார் கோவிலை பற்றியும், அம்மாவை பற்றியும் அடிகளாரை பற்றியும் 10 பாடல்களை எழுதி வைத்திருக்கிறேன். அந்த பாடல்களுக்கு எனக்கு இசையமைத்து தருகிறீர்களா என்று தேவாவிடம் கேட்டிருக்கிறார்.

மேலும், இந்த 10 பாடல்களுக்கு இசையமைக்க உங்களுக்கு பெரிய சம்பளம் தர எனக்கு வசதியில்லை. என்னிடம் பணம் இல்லை. நான் சேர்த்து வைச்ச பணம் 800 ரூபாய் தான் இருக்கு. அதை தருகிறேன், இந்த பாடல்களை ரெக்கார்டு பண்ணி தர்றீங்களா என்று தேவாவிடம் கேட்டிருக்கிறார். உடனே அவருக்கு அந்த 10 பாடல்களுக்கும் இசையமைத்து ரெக்கார்டிங் செய்து தந்திருக்கிறார் தேவா. இந்த தகவலை அவரே சமீபத்திய ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்