தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு ஹிந்தி அது மட்டுமல்ல ஹாலிவுட் திரை உலகிலும் தனது முகத்தை பதிவு செய்தவர் தனுஷ். இவருக்கு முதல் முதலில் தெலுங்கில் நேரடி திரைப்படமாக சார் திரைப்படம் எடுக்கப்பட்டது. தமிழில் வாத்தியாக வெளியானது. வெங்கட் அட்லூரி இயக்கிய இந்த திரைப்படம், அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.
இது ஒரு பக்கம் இருக்க தற்போது முழுக்க முழுக்க இயக்கத்திலேயே கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அவர் அடுத்ததாக, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை எடுத்தார். இளைஞர்களின் காதலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இதில் தனுஷின் சகோதரி மகன் நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்திலிருந்து ஏற்கனவே கோல்டன் ஸ்பேரோ பாடல் ஹிட் அடித்தது. இந்தத் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக, இட்லி கடை படத்தை இயக்கி வருகிறார் தனுஷ்.
தேனி மாவட்டத்தை கதைக்களமாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. தனது சொந்த ஊர் என்பதால் அங்கேயே படப்பிடிப்பை நடத்தி வருகிறார் தனுஷ். இதில் கதாநாயகியாக நித்தியா மேனன் நடிக்கிறார். படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இதுபோக தனுசும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. இப்படியான சூழலில் தனுஷின் குபேரா திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தெலுங்கில் அவர் நடிக்கும் நேரடி இரண்டாவது திரைப்படம் இது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் நாகார்ஜுனாவுக்கும் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமான திரைப்படம் போல் இல்லாமல் இது வித்தியாசமான கதை அம்சம் கொண்ட கதைக்களம் என கூறுகிறார்கள். பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்கும் சூழலில், அந்த ரோலின் வாழ்க்கையில் நடக்கும் வித்தியாசமான மாற்றம் தான் இதன் மையப்புள்ளி என்று பேசுகிறார்கள். படத்தில் முக்கியமான கதாபாத்திரங்கள் பணத்தை பின்தொடர்ந்து செல்வதும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் தான் இயக்குனர் சேகர் கம்முலா அலசி இருக்கிறாராம். அனேகமாக மார்ச் மாத இறுதியில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.





