- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் டைரக்ட் செய்த படத்தை ஒரு தடவைக்கு மேல் பார்க்கவே மாட்டேன், என்னால அது...

நான் டைரக்ட் செய்த படத்தை ஒரு தடவைக்கு மேல் பார்க்கவே மாட்டேன், என்னால அது முடியலே – வீரதீர சூரன் பட இயக்குனர் அருண்குமார் இப்படி சொல்லிட்டாரே?

- Advertisement -

சேதுபதி பண்ணையாரும் பத்மினியும் சித்தா ஆகிய படங்களை இயக்கியவர் அருண்குமார். இப்போது அவரது இயக்கத்தில் வெளியாகி திரையில் வீர தீர சூரன் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நாயகனாக சியான் விக்ரம் நாயகியாக துஷாரா விஜயன் மற்றும் வில்லனாக எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி மாலை வெளியான வீர தீர சூரன் படம், இதுவரை 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்திருக்கிறது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையிலும் வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் ரூ. 100 கோடி வசூல் பாக்ஸ் ஆபீஸ் லிஸ்ட்டில் இந்த படம் இணையுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

வீர தீர சூரன் படத்தின் இயக்குனர் அருண்குமார் ஏற்கனவே சேதுபதி பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சித்தா போன்ற யதார்த்த படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். அதுவும் காரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பண்ணையாரும் பத்மினியும் படத்தில் ஜெயப்பிரகாஷ், துளசியின் வயது முதிர்ந்த காதலை அவ்வளவு அழகாக திரையில் சொல்லியவர் இயக்குனர் அருண்குமார்.

இந்நிலையில் தனது படங்கள் குறித்து இயக்குனர் அருண்குமார் கூறியதாவது, வீர தீர சூரன் படத்தை ரிலீஸ்க்கு பிறகு ஒருமுறை தான் பார்த்தேன். ஆனால் மீண்டும் ஒருமுறை அந்த படத்தை பார்க்க மாட்டேன். தெரியலை. ஆனால் என்னால் பார்க்க முடியாது. ஏனென்று எனக்கு தெரியாது. இந்த படம் மட்டுமல்ல, நான் இயக்கிய எந்த படமாக இருந்தாலும் ஒரு தடவைக்கு மேல் நான் பார்த்தது இல்லை.

என்னோட படத்தை தான் என்னால் பார்க்க முடியாது. ஆனால் மற்றவர்கள் இயக்கிய படங்கள் என்றால் 100 முறை கூட சலிக்காமல் பார்த்து விடுவேன். என்னுடைய படங்களை என்னால் ஒரு முறைக்கு மேல் பார்க்க முடியலே. எண்ணிலடங்கா தடவை நான் பார்த்த படங்கள் உண்டு. என் படத்தை இன்னொரு வாட்டி பார்க்கறதுதான் எனக்கு பிரச்னை.

அதுவும் ஒரு படம் கம்ப்ளீட் ஆன பிறகு என்னால் ஒரு முறைக்கு மேல் என் படத்தை பார்க்க முடியலே. அப்படி பார்த்தால் நான் ரொம்ப அமெச்சூராக பீல் செய்வேன். படத்தில் செய்த நிறைய மிஸ்டேக்குகள்தான் எனக்கு தெரியும். அதனால், என்னுடைய படங்களை ஒருமுறைக்கு மேல் நான் பார்ப்பதே இல்லை என்று இயக்குனர் அருண்குமார் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்