இயக்குனர் அட்லி, பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர். அடுத்து முதலில் அவர் டைரக்ட் செய்த படம் ராஜா ராணி. ஆர்யா, ஜெய், நஸ்ரியா, நயன்தாரா, சத்யராஜ் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து விஜய் நடிப்பில் தெறி, பிகில், மெர்சல் என மூன்று ஹிட் படங்களை கொடுத்தவர். தொடர்ந்து இந்திக்கு சென்று பாலிவுட்டில் ஜவான் என்ற மிகப்பெரிய ஹிட்டை கொடுத்திருக்கிறார்.
ஷாருக்கான், நயன்தாரா, பிரியாமணி, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் 23 படங்களின் காப்பி என முதலில் கிண்டலடிக்கப்பட்டாலும் பின்னர், பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. மொத்தம் 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை படைத்தது.
இதையடுத்து விஜய் 69 படத்தை அட்லிதான் இயக்குவார் எனவும் ஒரு பேச்சு அடிப்பட்டது. மும்பையில் 40 கோடி ரூபாயில் அலுவலகம், மும்பையில் வீடு என செட்டிலான அட்லி அடுத்து ஷாருக்கான், அல்லது சல்மான்கானை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை மெகா பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் அல்லு அர்ஜூன் பிறந்த நாளான வரும் 8ம் தேதி, சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், டைரக்டர் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது. அது படத்தின் டைட்டிலாக கூட இருக்க அதிக வாய்ப்புள்ளது. புஷ்பா 2 படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்த படத்தின் படத்துவக்க விழா அல்லது அதுசார்ந்த அறிவிப்புகள் கூட வரும் 8ம் தேதி வெளியாகலாம்.
சன் பிக்சர்ஸ் தரப்பில், அல்லு அர்ஜூன் படத்தை இயக்கும் அட்லிக்கு மிகப்பெரிய சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்தமுறை ஜவான் படம் 1150 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், அந்த படத்துக்கு சம்பளம் மட்டுமே வாங்கியிருந்த டைரக்டர் அட்லி இந்த முறை விழித்துக்கொண்டு விட்டார். வெறும் சம்பளம் மட்டுமே என்றால் 50 கோடி, 100 கோடிதான் கிடைக்கும் என்பதால் இந்தமுறை வேறு பிளான் செய்துவிட்டார்.
அதன்படி அல்லு அர்ஜூன் படம் 500 கோடி ரூபாய்க்குள் வசூலிக்கும் எனில் தனக்கு சம்பளம் மட்டுமே போதும். ஆனால் 500 கோடிக்கு மேல் படம் வசூலிக்கும் பட்சத்தில் தனக்கு குறிப்பிட்ட சதவீதம் பிராப்பர்ட்டி ஷேர் வேண்டும் என பேசி, அதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஓகே சொல்லி விட்டது. இதனால் பிழைக்க தெரிஞ்ச மனுஷன் என கோலிவுட் வட்டாரத்தில் அட்லியின் புத்திசாலித்தனத்தை திரைத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.





