- Advertisement -
Homeபொழுதுபோக்குகடைசியில் தனது குருவின் அடி மடியில் கை வைக்கிறாரா சிஷ்யன்? அல்லு அர்ஜூன் நடிக்கும் கதையில்...

கடைசியில் தனது குருவின் அடி மடியில் கை வைக்கிறாரா சிஷ்யன்? அல்லு அர்ஜூன் நடிக்கும் கதையில் அதுவும் ஒரு பார்ட் தானாம்… அட்லி வழக்கமான வேலையை காட்டீட்டாரா?

- Advertisement -

புஷ்பா 2 படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடிக்கும் அடுத்த படம் ஏஏ 22. அதாவது அவர் நடிக்கும் 22வது படத்தை இயக்குனர் அட்லி இயக்குகிறார். ஆரம்பத்தில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அட்லி, ராஜா ராணி படம் மூலம் இயக்குனரானார். இந்த படம் அட்லிக்கு 6வது படமாகும். இந்த படத்தை 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் அல்லு அர்ஜூன் 3 கேரக்டர்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. சயன்டிபிக் படமாக இது உருவாகிறது. இதில் நாயகனாக நடிக்க அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ. 250 கோடி என்றும் அட்லியின் சம்பளம் 100 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் 2000 கோடி ரூபாய் வசூல் இலக்குடன் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில் ஏற்கனவே அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படம் ரூ. 1150 கோடிக்கு மேல் வசூலித்தது. அதே போல் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படமும் ரூ. 1800 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. அதனால் அல்லு அர்ஜூன் அட்லி இணைந்துள்ள இந்த படம் நிச்சயமாக ரூ. 2000 கோடி வசூலை எட்டி சாதனை படைக்கும் என்றும் உறுதியாக நம்பப்படுகிறது.

வழக்கமாக இயக்குனர் அட்லி என்றாலே பழைய படங்களில் இருந்து கதைகளை காட்சிகளை உருவுபவர் என்ற பெயர் இருக்கிறது. பிற படங்களை காப்பியடிக்கும் ஜெராக்ஸ் மன்னன் என்ற இயக்குனர்கள் பட்டியலில் நடிகர் அட்லிக்கு ஒரு முக்கிய இடம் உள்ளது. இதுவரை அவர் இயக்கிய 5 படங்களுமே இந்த விமர்சனத்தில் சிக்கி இருக்கின்றன.

இந்நிலையில் இந்தியன் 2 கேம் சேஞ்சர் இந்தியன் 3 படங்களை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் வேள்பாரி படத்தை 3 பாகங்களாக இயக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் தொடர் தோல்வி படங்களை தந்து வரும் இயக்குனர் ஷங்கர், மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி கதையை படமாக்குவாரா, மாட்டாரா என்பதே பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

இந்த சூழலை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட இயக்குனர் அட்லி, தனது இயக்கத்தில் உருவாகும் அல்லு அர்ஜூன் படத்தில் ஒரு முக்கிய பகுதிக்கான சப்ஜெக்ட்டை வேள்பாரி நாவலில் இருந்துதான் உருவி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடைசியில் தனது குருநாதர் ஷங்கர் அடிமடியிலேயே சிஷ்யர் அட்லி கை வைத்து விட்டாரா என தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

சற்று முன்