ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ தமிழில் நான்கு படங்களை இயக்கிவிட்டு ஐந்தாவதாக ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியிருக்கிறார்.அந்தப் படமானது செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதால் கண்டிப்பாக படமும் மெகா ஹிட்டாகும் என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.
அதுமட்டுமின்றி பாலிவுட்டில் எண்ட்ரி ஆகியிருப்பதால் கண்டிப்பாக இந்தப் படத்தில் பந்தயம் அடித்து அங்கு அடுத்தடுத்து படங்கள் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அட்லீ இருப்பதாக தெரிகிறது. அதன் காரணமாகத்தான் மும்பையிலும் அவர் ஒரு வீடு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஜவான் படத்துக்கு அடுத்ததாக தெறி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதற்கிடையே ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் சென்னையில் நடந்தது. அதில் பேசிய அட்லீ உருக்கமாக ஒரு விஷயத்தை பகிர்ந்துகொண்டார். அந்த விழாவில் பேசிய அவர், “எனது வெற்றிக்கு காரணம் யார் என்று கேட்கிறார்கள். சொல்கிறேன். நானும் எனது மனைவி ப்ரியாவும் ஒருமுறை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு சென்றோம். அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாததுபோல் இருந்தது.
என்ன ஆச்சு என கேட்டு அவரை டாக்டரிடம் அழைத்து சென்றேன். பரிசோதனை டாக்டர் வாழ்த்துகள் நீங்கள் அப்பாவாக போகிறீர்கள் என்றார். ரொம்பவே எமோஷனலான தருணம் அது. ஏனென்றால் எங்களுக்கு எட்டு வருடங்களாக குழந்தை இல்லை. பிறகு சரி டாக்டர் நான் இன்னும் மூன்று நாட்களில் இந்தியா திரும்ப வேண்டும். மனைவியையும் அழைத்துக்கொண்டு செல்லலாம்தானே என கேட்டேன்.
அதற்கு அவரோ; இல்லை ரொம்ப வருடங்கள் கழித்து கர்ப்பம் ஆகியிருக்கிறார். எனவே கண்டிப்பாக இப்போது ட்ராவல் கூடாது. 90 நாட்கள் கழித்துதான் நீங்கள் ட்ராவல் பண்ண முடியும் என்று கூறிவிட்டார். என்ன செய்வதென்று ஒரே குழப்பம். ஏனெனில் எட்டு வருடங்களாக என் மனைவியை நான் பிரிந்ததே இல்லை. உடனே ப்ரியா என்னிடம் நானாவது 9 மாதங்கள்தான் சும்க்கிறேன் நீ மூன்று வருடங்களாக இந்தப் படத்தை சுமக்கிறாய். நீ போய்ட்டு வா நான் பார்த்துக்குறேன் என்றார். இதற்கிடையே ஷாருக்கானுக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொன்னேன். அவர் வாழ்த்துக்கள். படத்தின் ஷெட்யூலை தள்ளி வைத்துக்கொள்ளலாம் என்றார்.
இருந்தாலும் இந்தியா வந்துவிட்டேன். ஒருநாள் ப்ரியா ஃபோன் செய்தார். நான் ஷாட் இருக்குமா என்றேன். சரி போயிட்டு வா என்று சொல்லிவிட்டு மீண்டும் ஃபோன் செய்தார். அப்போது குழந்தையின் இதய துடிப்பை முதன்முறையாக கேட்டேன்” என்று எமோஷனலாக கூறினார்.





