- Advertisement -
Homeபொழுதுபோக்குஆமா குமாரு… யார் இவரு…? காலா பட ரஜினி பாணியில் விஜய் பட...

ஆமா குமாரு… யார் இவரு…? காலா பட ரஜினி பாணியில் விஜய் பட இயக்குனரை மேடையில் அவமானப்படுத்திய இயக்குனர் பாலா!

- Advertisement -

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் காலா. இந்த படத்தில் ஒரு காட்சியில் பக்கத்தில் நிற்கும் குமார் என்பவரிடம் போதையில் பேசும் ரஜினிகாந்த், அரசியல்வாதியான ஷியாஜி ஷிண்டேவை பார்த்து ஆமா குமாரு… யார் இவரு என்று அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார். இது படத்தில் பெரிய அளவில் கைதட்டலை பெற்றது.

அதே போல் முன்னணி திரைப்பட இயக்குனராக பாலா, மேடையில் பேசிய போது ஒரு முன்னணி நட்சத்திர இயக்குனரை பார்த்து இவர் யார் என்றே எனக்கு தெரியாது, முன்ன பின்னே இவரை பார்த்ததே இல்லை என்று மேடையில் பகிரங்கமாக பேசியது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் 35 ஆண்டுகளுக்கு மேலாக இயக்குனராக இருப்பவர் ஏ வெங்கடேஷ். நடிகர் சரத்குமார் நடித்த ஏய் மற்றும் மகாபிரபு ஆகிய படங்கள் விஜய் நடித்த பகவதி பிரசாந்த் நடித்த சாக்லேட் சிலம்பரசன் நடித்த குத்து வாத்தியார் மாஞ்சாவேலு உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். இதில் பல படங்கள் வெற்றிப் படங்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

அதுமட்டுமின்றி ஏ வெங்கடேஷ் நடிகராகவும் இருக்கிறார். சட்டப்படி குற்றம் பாகன் அழகன் அழகி அசுரன் அங்காடித்தெரு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர பல படங்களில் ஏ வெங்கடேஷ் தற்போதும் நடித்து வருகிறார். இதற்கிடையே நடிகர் சசிக்குமார் நாயகனாக நடித்த மை லார்ட் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

- Advertisement -

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாலா கலந்துக்கொண்டார். விழாவில் மேடையில் பேசிய இயக்குனர் பாலா, இயக்குனர் ஏ வெங்கடேசனை தனக்கு யார் என்றே தெரியாது. இதுவரை அவரது படங்கள் பார்த்தது இல்லை என்றும் பகிரங்கமாக கூறினார்.

தமிழில் முன்னணி ஹீரோக்களை வைத்து பல படங்களை இயக்கிய இயக்குனர், நடிகர் ஏ வெங்கடேஷை யார் என்றே தனக்கு தெரியாது என்று இயக்குனர் பாலா மேடையில் சொன்னது உடனே சலசலப்பை ஏற்படுத்தியது.இது அவரை அவமானப்படுத்தும் செயலாக ரசிகர்களிடையே கடும் சர்ச்சை எழுந்துள்ளது. 4 படங்களை இயக்கிய மாரி செல்வராஜை தனது வழிகாட்டி என புகழ்ந்த பாலாவுக்கு ஏ வெங்கடேஷ் தெரியலையா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்