- Advertisement -
Homeபொழுதுபோக்குதங்களை சார்ந்தவர்களுக்கு மட்டுமே விருது… நானும் வாக்காளர் தான் - தமிழக அரசு திரைப்பட விருதுகள்...

தங்களை சார்ந்தவர்களுக்கு மட்டுமே விருது… நானும் வாக்காளர் தான் – தமிழக அரசு திரைப்பட விருதுகள் குறித்து இயக்குனர் சேரன் கோபம்!

- Advertisement -

சமீபத்தில் தமிழக அரசு சார்பில் 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்த விருதுகளில் பெரும்பாலும் திமுக சார்ந்த ஆதரவாளர்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக ஒரு பகிரங்க குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சூர்யா சார்ந்த படங்களுக்கு மட்டுமே 14 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் பல நல்ல திரைப்படங்கள் பல நல்ல இயக்குனர்கள் இந்த விருது பட்டியலில் இடம்பெறாமல் தவிர்க்கப்பட்டுள்ளனர். ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பல படங்கள் இந்த பட்டியலில் இல்லை. அதே போல் 7 ஆண்டுகளுக்கும் மொத்தமாக ஒரே நாளில் விருது வழங்க திமுக அரசு முன்வந்தது சட்டசபை தேர்தல் நெருங்குவதால்தான் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.

- Advertisement -

இயக்குனர் சேரன் தேசிய விருதுகளை பெற்ற சிறந்த படைப்பாளியாக இருக்கிறார். அவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் திருமணம். சேரன் சுகன்யா தம்பி ராமையா எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் ஆடம்பர திருமணங்களால் ஏற்படும் வாழ்க்கை பாதிப்புகள், குடும்ப சிக்கல்கள் குறித்து மிக ஆழமாக அழுத்தமாக பேசிய ஒரு நல்ல படமாக இருந்தது. ஆனால் இந்த படத்துக்கு விருது அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழக அரசின் திரைப்பட விருதுகள் குறித்து இயக்குனர் சேரன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, பெண்களுக்கு இலவச பஸ் வறுமையில் இருக்கும் குடும்பங்களுக்கு உதவி தொகை திருமணத்திற்கு அரசு உதவி இதையெல்லாம் அரசு செய்கிறது. பெரும் பணம் இல்லாத குடும்பங்களில் கடன் படாமல் சிக்கனமாக எப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும், வாழ்க்கைக்கான சேமிப்பாக எப்படி அதை மாற்றலாம் என்ற கருத்தோடு விளிம்புநிலை மக்களுக்கான படமாக உருவாக்கப்பட்ட படம் திருமணம்.

- Advertisement -

திருமணம் திரைப்படம் தேர்வுக்குழுவினரால் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வையற்ற தன்மையை அல்லது தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையை காட்டுகிறது. அரசுக்கு வரிகட்டி வாக்களித்து நாங்களும் இந்த சமூகத்தின் வாக்காளர்கள் என்ற உரிமையில் எனக்கு கேட்கும் உரிமை இருக்கிறது.

இனி எவருக்கும் இது போல் நடக்கக்கூடாது. நேர்மையான முறையில் பாரபட்சமின்றி யாரும் ஒதுக்கப்படாமல் விருதுகள் சென்றடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசுகள் மாறலாம் அரசின் நிலைப்பாடு என்றும் பாரபட்சமாக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறேன் என்று அந்த பதிவில் இயக்குனர் சேரன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்