- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி ரசிகர்களுக்கு ஒரு கம்ப்ளீட் மீல்ஸ் காத்திருக்கிறது - ஜனநாயகன் படம் குறித்து அப்டேட் கொடுத்த...

தளபதி ரசிகர்களுக்கு ஒரு கம்ப்ளீட் மீல்ஸ் காத்திருக்கிறது – ஜனநாயகன் படம் குறித்து அப்டேட் கொடுத்த இயக்குனர் எச் வினோத்!

- Advertisement -

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம். அதை கலையம்சமாக மாற்றுவது திறமையான கலைஞர்களால் முடியும். ஒரு திரைப்படம் இரண்டரை மணி நேரம் படம் பார்க்கும் ரசிகர்களை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். சமூக உணர்வு தாக்கங்களை ஏற்படுத்த வேண்டும். ஒரு நல்ல கருத்தை அனுபவ பாடத்தை படத்தில் வரும் கேரக்டர்களால் உணர்த்த வேண்டும்.

அப்படிப்பட்ட நோக்கங்களுடன் இயக்குனர்கள் படம் எடுத்த காலம் மலையேறி போய்விட்டது. கமர்ஷியல் என்ற பெயரில் குப்பை கதைகளை மொக்கை படங்களை தரும் இயக்குனர்கள் இன்றைய தமிழ் சினிமாவில் பெருகி விட்டனர். ஆரம்பம் முதல் இறுதி வரை வன்முறையை நம்பி மட்டுமே படம் இயக்கும் இயக்குனர்கள் மத்தியில் நல்ல கதை கொண்ட படங்கள் வருவதே அரிதாகி விட்டது.

- Advertisement -

ஆனால் சில நட்சத்திர நடிகர்களின் படங்கள் கமர்ஷியல் ஹிட் கொடுத்த போதிலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிப்பை தந்து ரசிகர்களை தன்வசப்படுத்தி விடுகின்றனர். தமிழ் சினிமாவில் அப்படி ஒரு நட்சத்திர நடிகராக இருப்பவர் விஜய். தளபதி என அழைக்கப்படும் அவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

வலிமை துணிவு நேர்கொண்ட பார்வை சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் 1 போன்ற படங்களை இயக்கிய எச் வினோத், நடிகர் விஜய் நடிப்பில் ஜனநாயகன் என்ற படத்தை எடுத்திருக்கிறார். இந்த படம் வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரி 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே மமிதா பைஜூ பாபி தியோல் பிரகாஷ் ராஜ் நரேன் கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

ஜனநாயகன் படம் குறித்து சமீபத்தில் பேசிய இயக்குனர் எச் வினோத் கூறியிருப்பதாவது, ஜனநாயகம் ஒரு பக்கா பேர்வெல் படம். மாஸ் கமர்சியல் ஆக்சன் இந்த மூன்றும் கலந்த படமாக இருக்கும். அந்த வகையில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு கம்ப்ளீட் மீல்ஸ் கொடுத்து இருக்கிறேன். அவர்கள் தியேட்டருக்கு தங்களது வழக்கமான எதிர்பார்ப்புடன் வரலாம் என்று அந்த நிகழ்ச்சியில் பேசும்போது எச் வினோத் பேசியிருக்கிறார்.

ஜனநாயகன் படம் தனது கடைசி படம் என்று ஏற்கனவே நடிகர் விஜய் அறிவித்து விட்டதால் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் இந்த படம் என்றும் சொல்லப்படுகிறது. வருகிற டிசம்பர் மாதம் மலேசியாவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்