- Advertisement -
Homeபொழுதுபோக்குஜகமே தந்திரம், மகான் படங்கள் ஓடிடியில் வெளியாவது, கடைசி வரை எங்களுக்கே தெரியாது - அதிர்ச்சி...

ஜகமே தந்திரம், மகான் படங்கள் ஓடிடியில் வெளியாவது, கடைசி வரை எங்களுக்கே தெரியாது – அதிர்ச்சி கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்…

- Advertisement -

பீட்சா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். முதல் திரைப்படத்திலேயே வித்தியாசமான ஹாரர் திரைப்பட அனுபவத்தை கொடுத்து நம்மை திரும்பி பார்க்க வைத்த அவர், அடுத்தடுத்து பல படங்களை இயக்கி தனக்கான இருப்பை தக்க வைத்துக் கொண்டார்.

ஜிகர்தண்டா, இறைவி உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அவர் இணைந்தார். தன்னை எப்போதுமே ரஜினி ரசிகராக காட்டிக் கொள்ளும் அவர், தனது இயக்கத்தில் உருவான பேட்டயில் பல ஃபேன் பாய் சம்பவங்களை வைத்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தனுசை வைத்து ஜகமே தந்திரம் மற்றும் விக்ரமை வைத்து மகான் திரைப்படங்களை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார். ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களுமே திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியாகின. அதனால் இந்த திரைப்படங்கள் பெரிய அளவில் மக்களிடம் சென்று சேரவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் அவர், இது குறித்து பேசியதாவது,

“இந்தக் கேள்வியை பலரும் என்னிடம் தான் கேட்கிறார்கள். முதலில் இந்த படங்களுக்கு தயாரிப்பாளர் என்று ஒருவர் இருக்கிறார். இந்த விஷயம் என்னை எவ்வளவு பெரிய மன அழுத்தத்தில் தள்ளியது என்பதை நான் மறக்கவே நினைக்கிறேன். இரண்டு திரைப்படங்களையும், நாங்கள் முடித்துவிட்டு முதல் காட்சிக்காக காத்திருக்கும் வரை எங்களுக்கு இது ஓடிடியில் வெளியாகப் போகிறது என்பதை தெரியாது.

அது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கு நானும் சரி, தனுஷ் யாரும் சரி, படக்குழுவினரும் சரி தயாரிப்பாளரிடம் கெஞ்சி இருக்கிறோம். அதேபோன்றுதான் மகான் படத்திற்கும் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இயக்குனர் ஒன்றும் செய்ய முடியாது அல்லவா. எல்லாம் தயாரிப்பாளர் முடிவு தானே.

இருப்பினும் அந்த இரண்டு திரைப்படங்களும், கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் போது ஓடிடியில் வரவில்லை. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர்தான் இப்படி நடந்தது. மகான் திரைப்படம் இப்படி ஓடிடியில் வெளியாக போகிறது என்று தெரிந்தவுடன் துருவ் விக்ரம் மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்தார். தயாரிப்பாளர் தரப்பிலிருந்தும் ஆலோசனைக்கு எல்லாம் வந்தார்கள். ஆனால் இறுதியில் அவர்கள் தரப்புக்குரிய படிதான் நடந்தது. இப்படியான சூழல் இருக்கும்போது, பலரும் எங்களிடம் வந்து நீங்கள் ஏன் படங்களை ஓடிடிக்கு கொடுத்தீர்கள் என்று கேட்கிறார்கள்” என்று கூறி முடித்தார்.

சற்று முன்