- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னுடைய டைரக்‌ஷனில் விஜய் நடிக்க வேண்டிய 3 படங்கள், மிஸ் ஆனது எப்படி? - ஆதங்கமாக...

என்னுடைய டைரக்‌ஷனில் விஜய் நடிக்க வேண்டிய 3 படங்கள், மிஸ் ஆனது எப்படி? – ஆதங்கமாக பேசிய பிரபல இயக்குனர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஓரிரு வெற்றிப் படங்களை கொடுத்துவிட்டாலே பல இயக்குனர்களுக்கு முன்னணி நட்சத்திர நடிகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற பேராவல் வந்துவிடும். அதிலும் குறிப்பாக நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் அஜீத்குமார் போன்ற நட்சத்திர நாயகர்களை வைத்து படம் இயக்குவது என்பது இயக்குனர்களின் மிகப்பெரிய கனவாகவே இருக்கும்.

ஏனென்றால் இதுபோன்ற உச்ச நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கும்போது அந்த இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் இமேஜ் தாறுமாறாக உயர்ந்துவிடும். ஒருவேளை அந்த படம் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமாக அமைந்துவிட்டால் தொடர்ந்து அவர்களுக்கு மற்ற உச்ச நட்சத்திரங்களும் பட வாய்ப்புகளை வழங்க முன் வருவார்கள். இதன் மூலம் மிகப்பெரிய ஒரு உயரத்துக்கு சென்று விட முடியும்.

- Advertisement -

உதாரணமாக ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதன் பிறகு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடித்த தெறி மெர்சல் பிகில் ஆகிய 3 படங்களை அட்லி அடுத்தடுத்து இயக்கினார். இந்த 3 படங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அடுத்ததாக அவர் இந்தி சினிமாவில் கால்பதித்தார்.

பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் என்ற படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். அந்த படமும் 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளிய நிலையில், இப்போது ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிக்கும் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு பிரமாண்ட படத்தை அட்லி டைரக்ட் செய்து வருகிறார்.

- Advertisement -

இதுபோல் தான் ஒவ்வொரு இயக்குனரும் தங்களது வளர்ச்சியை பெரிய நடிகர்களை இயக்கி முன்னேற்ற பாதையில் செல்ல ஆசைப்படுகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. அவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இருக்கின்றன. ஆனால் அவர் நடிகர் விஜய் நடித்த ஒரு படத்தைக் கூட டைரக்ட் செய்ததில்லை.

இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் லிங்குசாமி கூறியதாவது, நான் மிக தீவிரமான ரஜினி ரசிகன். ஆனால் என் வீட்டில் எல்லோருமே விஜய் ரசிகர்கள்தான். நான் விஜய் கூட 3 படங்கள் செய்ய வேண்டியது. ஆனால் நடக்காமல் போய்விட்டது. மாதவனுக்கு முன்னாடி ரன் படத்தில் நடிக்க வேண்டியது விஜய்தான். அதேபோல் சண்டக்கோழி படமும் வேட்டை படமும் கூட விஜய்தான் பண்ண வேண்டியது. அந்த நேரத்தில் விஜய் ரசிகர்கள் என் மீது பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தார்கள். ஆனால் சில பல காரணங்களால் நானும் விஜயும் சேர்ந்து படம் செய்ய முடியாமல் போய்விட்டது, என்று இயக்குனர் லிங்குசாமி ஆதங்கமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்