- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்க கூட படம் தான் பண்ண முடியலே, அந்த பதவியாவது கிடைக்குமா? - விஜயிடம் நேரடியாக...

உங்க கூட படம் தான் பண்ண முடியலே, அந்த பதவியாவது கிடைக்குமா? – விஜயிடம் நேரடியாக கேட்ட பிரபல இயக்குனர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் லிங்குசாமி. சண்டக்கோழி சண்டக்கோழி 2 பையா அஞ்சான் ரன் வேட்டை என பல படங்களை இயக்கியவர். மேலும் திருப்பதி பிரதர்ஸ் என்ற பெயரில் படங்களையும் தயாரித்து வருகிறார். லிங்குசாமி இயக்கிய நடிகர் சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு ரி ரிலீஸ் ஆனது.

இப்போது அவர் தனது இயக்கத்தில் உருவான ரன் படத்தையும் ரி ரிலீஸ் செய்ய தயாராகி அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். நடிகர் மாதவன் நடிகை மீரா ஜாஸ்மின் நடிகர் விவேக் ரகுவரன் அனுஹாசன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் 2002ம் ஆண்டில் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது.

- Advertisement -

வழக்கமாக ஜாலியான படங்களில் நடிக்கும் நடிகர் மாதவன் ரன் படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடித்திருந்தார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் லிங்குசாமி கூறியதாவது, ரன் படத்தை விஜய்க்கு பண்ணுவதற்காக ஏவிஎம் நிறுவனத்தில் இருந்து என்னை அனுப்பினார்கள். கதை சொல்வதற்காக நான் எஸ்ஏ சந்திரசேகர் சாரை சந்தித்தேன்.

ஆனால் அப்போது விஜய் வேறு மாதிரியான படங்களை கமிட் செய்திருந்தார். இப்படியான படங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற இமேஜையும் வைத்திருந்தார். என்னிடம் பேசிய எஸ்ஏ சந்திரசேகர், தம்பி இப்போது தமிழன் என்ற படத்தில் நடிக்கிறார். இப்போது ஒரு பெண் பின்னால் சுற்றும் கதையை தம்பி செய்தால் சரியாக இருக்காது என்று கூறிவிட்டார்.

- Advertisement -

அதன்பிறகு சண்டக்கோழி படமும் விஜயை வைத்து தான் நான் செய்ய திட்டமிட்டு இருந்தேன். ஆனால் அதுவும் மிஸ் ஆகிவிட்டது. பிறகு வேட்டை படத்தையும் அவரை வைத்து செய்வதற்காகத்தான் நான் திட்டமிட்டு இருந்தேன். ஆனால் அதுவும் மிஸ் ஆகிவிட்டது. என்னுடைய படத்தை விரும்பி பார்ப்பவர்களும் விஜய் ரசிகர்களும் என்னிடம் வந்து நீங்கள் விஜய்க்கு ஏன் படம் பண்ணவில்லை. நீங்கள் இருவரும் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லுவார்கள்.

ஒரு முறை லியோ படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் விஜயை சந்தித்தேன். அப்போது அவரிடம், நாம் சேர்ந்து படம் தான் செய்ய முடியவில்லை. ஒரு வார்டு கவுன்சிலராவது… என்று சிரித்துக் கொண்டே சொன்னேன். அதற்கு அவர் அப்போது, அண்ணா சும்மா இருங்கண்ணா என்று கூறிவிட்டார் என்று ஜாலியாக பேசியிருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.

- Advertisement -

சற்று முன்