- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர்கள் விரும்பும் கதைகளை நான் எழுத மாட்டேன், ஓபனாக பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் -...

ரசிகர்கள் விரும்பும் கதைகளை நான் எழுத மாட்டேன், ஓபனாக பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – என்ன ப்ரோ இப்படி சொல்லிட்டீங்க?

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கூலி படம் கலவையான விமர்சனங்களுடன் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக தோல்வி படமாகவே பார்க்கப்படுகிறது. இந்த படம் வெளியானது முதல் கடும் விமர்சனத்தில் லோகேஷ் கனகராஜ் சிக்கியிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று கோவை வெள்ளலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார். கூலி படம் வெளியான பிறகு அவர் கலந்துக்கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இதுதான். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது உணர்வுகளை வெளிப்படையாக கூறினார்.

- Advertisement -

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, ஒரு ரசிகரின் எதிர்பார்ப்பை நான் விமர்சிக்க முடியாது. கூலி படத்தை பொறுத்தவரை இது டைம் ட்ராவல் படம் என்றோ எல்சியு படம் என்றோ நான் ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் ரசிகர்கள் அதைத்தான் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் நான் ஒருபோதும் கதைகளை எழுத மாட்டேன். அது வெற்றி பெற்றால் நல்லது. இல்லையென்றால் நான் மீண்டும் முயற்சிப்பேன்.

எதிர்காலத்தில் அனிருத் இல்லாமல் நான் எந்த படத்தையும் டைரக்ட் செய்ய மாட்டேன். அவர் சினிமாவை விட்டு வெளியேறினால் வேறு வழிகளை பற்றி யோசிப்பேன். பள்ளி மாணவர்கள் சிறுவயதிலேயே புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வந்து அவற்றுக்கு காப்புரிமையும் பெற்று வைத்திருக்கின்றனர்.

- Advertisement -

இனிவரும் காலங்களில் திரைத்துறையில் ஏஐ யின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பதை விட அதனுடைய உதவி அதிகளவில் இருக்கும். அது ஒரு தொழில்நுட்பம். அதன் உதவியை பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்று நானும் நினைக்கிறேன். அது திருப்திப்படுத்துமா என்பது பயன்படுத்துபவர்களை பொறுத்தது.

எந்த ஒரு தொழில்நுட்பமும் வரும்போது வெளியில் இருந்து பார்ப்போம். பிறகு அதனுடன் பழகி விடுவோம். கூலி படத்தில் ரஜினியின் குரல் ஏஐ தொழில் நுட்பம்தான். அது போல ஏஐ தேவை என்றால் பயன்படுத்திக் கொள்வேன். அதுபோல் இசைக்கு நான் அனிருத்தை எப்போதும் பயன்படுத்திக் கொள்கிறேன். நான் நடிக்கும் படம் எப்படி இருக்க வேண்டும் என்றால் அருண் மாதேஸ்வரன் கூறுவதுபோல் தான் நடிப்பேன் என்று லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்

- Advertisement -

சற்று முன்