“மாமன்னன்” திரைப்படத்தில் இடம்பெற்ற ரத்னவேலு கதாபாத்திரத்தை சமூக ஊடகங்களில் ஜாதி சார்ந்த பல குழுக்கள் கொண்டாடி வந்தனர். பகத் பாசில் இடம்பெற்ற காட்சிகளை இணைத்து தமிழ் சினிமாவில் இடம்பெற்ற பல மாஸ் ஆன பாடல்களை பின்னணியில் ஒலிக்கவிட்டு இணையத்தில் வைரல் ஆக்கி வந்தனர். கிட்டத்தட்ட தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஜாதிகளும் ரத்னவேலுவை தனது சொந்த சாதியைப் போல் கொண்டாடடிவிட்ட்னர்.

“மாமன்னன்” திரைப்படம் சொல்ல வந்த செய்தியை எதிர்மறையாக புரிந்துகொண்டுவிட்டார்கள் என ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக ஆனந்த விகடன் பத்திரிக்கையில் வந்த செய்தி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வந்தது.
அதாவது ரத்னவேலு கதாபாத்திரத்தை மட்டும் வைத்து ஒரு படத்தை இயக்க மோகன் ஜி, பகத் பாசிலுக்கு தொலைப்பேசியில் தொடர்புகொண்டதாகவும், அதற்கு பகத் பாசில் அந்த ஃபோன் காலை தூண்டித்துவிட்டு மோகன் ஜியின் மொபைல் எண்ணை பிளாக் செய்துவிட்டதாகவும் அதில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்த செய்தி இணையத்தில் படுபயங்கரமாக வைரல் ஆன நிலையில், இயக்குனர் மோகன் ஜி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் , “என்னைப் பற்றி ஒரு தவறாக செய்தி பரவி வருகிறது. இந்த வார ஆனந்த விகடனில் நான் பகத் பாசிலுக்கு தொடர்புகொண்டு அவரை ரத்னவேலு படத்தில் நடிக்க அணுகியிருந்ததாகவும் அவர் என் நம்பரை பிளாக் செய்துவிட்டதாகவும் அதில் எழுதியிருந்தது” என கூறி இந்த வார ஆனந்த விகடனை காட்டினார்.
மேலும் பேசிய அவர், “இந்த செய்திக்கு கீழேயே இதில் எதுவும் உண்மை இல்லை என்று எழுதியிருக்கிறது. ஆனால் ஜாதி வெறியோடு இந்த செய்தியை இணையத்தில் பரப்பி வருகின்றனர். ஆனந்த விகடனுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன், ஒரு நாள் பகத் பாசிலை வைத்து ஒரு படம் எடுப்பேன். அப்போது நீங்களே அதனை செய்தியாக போடுவீர்கள்” என்று சவாலும் விட்டிருக்கிறார்.





