நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர். தமிழ் ஹீரோ நடிகர்களில் அதிகபட்சமாக 275 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியவர் அவர்தான். ஜனநாயகன் படத்துக்காக அவருக்கு பேசப்பட்ட சம்பளம் ரூ. 275 கோடி ரூபாய் என்று அப்போதே தகவல் வெளியானது. ஆனால் அந்த படம் தான் ரிலீஸாகாமல் இன்னும் முடங்கி போயுள்ளது.
தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர்கள் ரஜினி கமல் கூட இன்னும் ஒரு படத்தில் நடிக்க ரூ. 150 கோடி வரை தான் சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் விஜய் மட்டும் ரூ. 275 கோடி வரை சம்பளம் வாங்கியதற்கு காரணம் அவரது தோல்வி படங்கள் கூட வணிக ரீதியாக பெரிய வெற்றிப் படங்களாக தயாரிப்பாளர்களுக்கு கணிசமாக லாபத்தை தந்து விடுகின்றன.
நடிகர் விஜய் நடித்த திருப்பாசி சிவகாசி ஆகிய 2 படங்களை இயக்கியர் இயக்குனர் பேரரசு. இந்த 2 படங்களுமே விஜய் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அவருக்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்தவை. நடிகர் விஜய் சினிமாவில் இருந்த போதிலும் அரசியலுக்கு வந்த பிறகும் 6 மணிக்கு மேல் வெளியிடங்களுக்கு வருவதில்லை என்ற விமர்சனம் உள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் பேரரசு கூறியதாவது, விஜய் ஒரு படத்துக்கு நடிக்க கால்ஷீட் தரும்போது மொத்தம் 3 கண்டிஷன்களை போடுவார். முதலாவது கண்டிஷன் ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்பு இருக்கக் கூடாது. இரண்டாவது கண்டிஷன் மாலை 6 மணிக்கு மேல் படப்பிடிப்பு இருக்கக் கூடாது.
ஒருவேளை இரவு நேர காட்சிகளை படமாக்க வேண்டும் என்றால் மறுநாள் காலையில் படப்பிடிப்பு இருக்கக் கூடாது. அதேபோல் 3வது கண்டிஷனாக தனது பிறந்த நாளில் படப்பிடிப்பு இருக்கக் கூடாது என்று 3 கண்டிஷன்களை அவர் போடுவார். இதில் அவர் 6 மணிக்கு மேல் படப்பிடிப்புக் கூடாது என்பதற்கு மிகவும் முக்கியமான காரணம் அவர் தனது உடல் நலத்தின் மீது எடுத்துக் கொள்ளும் கவனம் தானே தவிர வேறு எதுவும் இல்லை.
அதே போல் அவரது பிறந்தநாளில் படப்பிடிப்பு கூடாது என்பதற்கான காரணம் அந்த நாளில் அவர் தனது ரசிகர்களை சந்திப்பார் என்பதுதான். எனது திருப்பாச்சி மற்றும் சிவகாசி என 2 படங்களின் தொடர்ந்து 5 நாட்கள் எல்லாம் இரவில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். அதில் அவர் சொன்னபடி நடித்துக் கொடுத்துவிட்டார். ஆனால் மறுநாள் காலையில் அவருக்கு நாங்கள் காட்சி வைக்க மாட்டோம் என்று இயக்குனர் பேரரசு சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசும்போது கூறியிருக்கிறார்.





