- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்னும் 5 ஆண்டுகளில் சோஷியல் மீடியா இப்படிதான் இருக்கும், குண்டை தூக்கிப் போட்ட இயக்குனர் சமுத்திரக்கனி...

இன்னும் 5 ஆண்டுகளில் சோஷியல் மீடியா இப்படிதான் இருக்கும், குண்டை தூக்கிப் போட்ட இயக்குனர் சமுத்திரக்கனி – என்ன ப்ரோ இப்படி சொல்லிட்டீங்க?

- Advertisement -

இன்றைய யுகத்தை கலியுகம் என்று சொல்வதை விட டிஜிட்டல் யுகம் என்று சொல்வதே மிக சரியாக பொருத்தமானதாக இருக்கும். அந்தளவுக்கு சோஷியல் மீடியா மனிதர்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்துவிட்டது. உணவு தண்ணீர் இல்லாமல் கூட சில தினங்கள் வாழ தயாராக இருக்கிற மனிதர்களால் ஆண்ட்ராய்டு போன் இல்லாமல் ஒரு மணி நேரத்தை கூட கழிப்பது கடினமாகி விட்டது.

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் சமுத்திரக்கனி. ஒரு நல்ல படைப்பாளியாக சமூக கருத்துகளை தனது படங்களில் சொல்பவர். நல்ல அழுத்தமான திரைக்கலைஞனாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர். சமீபத்தில் அவர் நடித்த திரு மாணிக்கம் என்ற படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனமும் வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் சமுத்திரக்கனி சமூக வலைதளங்களின் தாக்கம் குறித்து கூறியதாவது, இன்னும் 5 ஆண்டுகள் கழித்து பார்த்தால் சோஷியல் மீடியா என்பது முழுக்க முழுக்க ஒரு நிர்வாண கிடங்காக தான் இருக்கும். இப்போது அதை நோக்கிதான் நகர்ந்துகிட்டு இருக்கிறது. ஏனென்றால் அதில் ஒரு வருமானம் கிடைக்கிறது.

எதை எல்லாம் காட்டினால் எனக்கு ஆள் வரும், எதை எல்லாம் காட்டுனா எனக்கு வியூவர்ஸ் வரும் அப்போ வருமானம் எவ்வளவு வரும் என்று அதில் வருமானம் வைத்து விட்டதால் எல்லாமே அப்படி மாறிவிட்டது. சில பெண்கள் எல்லாம் ரொம்ப கொடூரமாக வெளிப்படையாகவே இப்படிச் சொல்கின்றனர்.

- Advertisement -

எனக்கு நடிப்பதில் வேலை பார்ப்பதில் எனக்கு சிறிதும் ஆர்வம் கிடையாது. இதிலேயே எனக்கு நிறைய பணம் வருகிறது. தினமும் காலையில் எழுந்திரிச்சு விட்டால் அன்று முழுவதும் இதே வேலையாக தான் இருக்கேன். நான் எதுக்கு நடிக்க வரணும் என்ற மனநிலைக்கு போய் விட்டார்கள்.

டிஜிட்டல் பாஸ்ட்டிங் என்று இன்று நான் போனையே தொட மாட்டேன். போனே பேச மாட்டேன் என்று உண்ணாவிரதம் இருப்பது போன்று போனையே தொடாமல் தவிர்த்துவிட வேண்டும். எனக்கும் போனும் ரொம்ப தூரம். நான் சோசியல் மீடியா பார்க்கவே மாட்டேன் என்று இருந்தால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும், என்று இயக்குனர் சமுத்திரக்கனி அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்