கடந்த 5ம் தேதி மணிரத்னம் இயக்கிய கமல் சிம்பு திரிஷா நடித்த தக்லைஃப் படம் வெளியானது. அதற்கு 2 வாரங்களுக்கு முன் தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடந்தது. இந்த விழாவில் பாடகி சின்மயி, முத்தமழை என்ற பாடலை பாடியது இணையத்தில் செம வைரலானது.
இந்த பாடலை தக்லைஃப் படத்துக்காக பாடகி தீ பாடிய நிலையில், இசை வெளியீட்டு விழாவுக்கு வர முடியாததால் மேடையில் பாடகி சின்மயி அந்த பாடலை பாடியது பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஆனால் இப்படிப்பட்ட திறமையான பாடகி சின்மயி, கடந்த 6 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பாடவும், பின்னணி குரல் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் மீ டூ இயக்கம் பிரபலமான போது, ஆண்களால் பாதிக்கப்பட்ட பல பெண்கள், சில நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து மீ டூவில் வெளிப்படையாக பேசினர். அப்போது பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை எழுப்பினார். இது பெரிய அளவில் தமிழ் சினிமா வட்டாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது.
வைரமுத்து மீது பழி சுமத்தியதாக பாடகி சின்மயி தமிழ் சினிமாவில் பாடல்கள் பாடக் கூடாது, டப்பிங் பேசக்கூடாது என கோலிவுட்டில் ரெட்கார்டு விதித்த நிலையில், சின்மயி 6 ஆண்டுகளாக தெலுங்கு படங்களில் பாடிக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் டப்பிங் பேசிவருகிறார் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த சூழலில் நடிகை சின்மயி, கவிஞர் வைரமுத்து மீ டூ வில் பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. அதில் சின்மயி கூறியதாவது, வைரமுத்து என்னை கட்டிப்பிடித்து அணைக்கும் போது நான் அப்படியே உறைந்து விட்டேன். இது என்னமோ தப்பா இருக்குன்னு தோணுச்சு. எனக்கு கை கால் ஓடல. ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டேன். என் மூளை வேலை செய்யவில்லை. பின் பதறியடித்து ஓடிவிட்டேன்.
என் அம்மா கீழே இருந்தாங்க. என் அம்மா அங்கு இருக்கிறார் என்று தெரிந்துதான் அந்த ஆளு இப்படி செய்தார். அம்மா என்னை எப்போதும் தனியாக விட மாட்டாங்க. மேலேதானே என்று இருந்தாங்க. எனக்கு இப்படி நடந்தது என்று என் அம்மாவிடம் சொன்னேன். உன் கேரக்டர் என்னான்னு சோதிக்க இப்படி பண்றாரோ என்னவோ. இவங்க பெரிய ஆளுங்க. எது சொன்னாலும் கொலை கூட பண்ணிட்டு போயிடுவாங்க என்று என் அம்மா என்னிடம் கூறினார் என்று அந்த பேட்டியில் சின்மயி கூறியிருக்கிறார்.





