இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் அவர் இதுவரை 15 படங்களை டைரக்ட் செய்திருக்கிறார். படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ஒவ்வொரு படமும் பிரமாண்டமாக பெயர் சொல்ல வைப்பவை. கடைசியாக வெளியான இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்களை தவிர மற்ற படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் படங்களாக வெற்றி பெற்றவை.
இயக்குனர் ஷங்கருக்கு 2 மகள்கள், ஒரு மகனள் இருக்கின்றனர். மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணமாகி விட்டது. இன்னொரு மகள் அதிதி ஷங்கர் மாவீரன் நேசிப்பாயா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து நடிப்பில் பிஸியாக இருக்கிறார். தனது மகன் அர்ஜித் ஷங்கர் குறித்த தகவலை அவரது அப்பா ஷங்கரே ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் இயக்குனர் ஷங்கர் கூறியதாவது, என் மகன் என்னுடன் பணிபுரிய வேண்டும் என்பதுதான் என் ஆசை. ரொம்ப இன்டெலிஜென்ட் ஆன பையன். ஆனால் என்கூட ஒர்க் பண்ணினால் அவனை அசிஸ்டென்ட் டைரக்டராக யாரும் ட்ரீட் பண்ண மாட்டார்கள்.
டைரக்டர் பையன் என்று அவனுக்கு சலுகைகள் கொடுத்து, அவன் எதுவும் கத்துக்க முடியாமல் போயிடுமோ அப்படீங்கற தயக்கம் எனக்கு இருந்தது. அதனால் வேற யாரிடமாவது ஒர்க் செய்தால் பெட்டர் என்று எனக்கு தோன்றியது.
அதனால் அவன் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய படங்களில் உதவி இயக்குனராக இருந்தான். என் படங்களிலும் உதவி இயக்குனராக வேலை செஞ்சிருக்கான் கேம் சேஞ்சர் படத்தில் 2 ஷெட்யூல் வந்தான். நல்லா இருந்துச்சு. முருகதாஸ் சாரிடம் ஒர்க் செய்ததில் சினிமா என்ன என்பது அவனுக்கு தெரிந்திருக்கிறது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் டைரக்டர் பையன் என்ற ட்ரீட் இருந்தாலும், என்னோட லிமிட் இதுதான், அதை தாண்டக் கூடாது என்பதில் அர்ஜித் ஷங்கர் தெளிவாக இருந்தான். அங்க நான் டைரக்டர். அவருக்கு என்ன மரியாதை தரணுமோ, அவர் சொல்றதை எப்படி செய்யணுமோ அப்படி இருந்தான். எனக்கு ரொம்ப நல்லா இருந்தது. ஆரோக்கியமாகவும் இருந்தது என இயக்குனர் ஷங்கர் தனது மகன் குறித்து கூறியிருக்கிறார்.





