- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் எஸ்ஜே சூர்யா இப்படி யோசிக்காமல் பேசலாமா? ரஜினி ரசிகர்களிடம் வசமாக மாட்டிக் கொண்ட நடிப்பு...

இயக்குனர் எஸ்ஜே சூர்யா இப்படி யோசிக்காமல் பேசலாமா? ரஜினி ரசிகர்களிடம் வசமாக மாட்டிக் கொண்ட நடிப்பு அரக்கன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வாலி குஷி படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்ஜே சூர்யா இப்போது பிஸியான நடிகராக இருந்து வருகிறார். தமிழ் தெலுங்கு இந்தி என பல மொழிகளில் நெகட்டிவ் ரோல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் சினிமா விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்றார்.

அப்போது நடிகர் எஸ்ஜே சூர்யாவுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக ஜப்பானை சேர்ந்த அவரது ரசிகை ஒருவர், குடும்பத்துடன் மேடைக்கு வரவழைக்கப்பட்டார். அப்போது அவர்கள் நடிகர் எஸ்ஜே சூர்யாவுக்கு தங்களது பரிசுகளை வழங்கி தமிழில் வாழ்த்துகளை சொல்லி அசத்தினர்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து மேடையில் பேசிய நடிகர் எஸ்ஜே சூர்யா, ஜப்பானில் இதுவரை நான் நடித்த படங்கள் 5 மட்டுமே ரிலீஸாகி உள்ளன. ஆனால் இந்தளவுக்கு ஜப்பானிய மக்கள் என்னை தெரிந்து வைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இவர்களிடம் பேசும்போது யார் மிகவும் பிடித்த நடிகர் என்று கேட்டேன்.

அப்போது அவர்கள் முதலில் நடிகர் விஜய் பெயரை சொன்னார்கள். அதன்பிறகு நடிகர் விஜய் சேதுபதி பெயரை சொன்னார்கள். 3வதாக என்னுடைய பெயரை சொன்னார்கள் என்று எஸ்ஜே சூர்யா பேசினார். இதில் விஜய் பெயரை எஸ்ஜே சூர்யா சொன்ன போது அரங்கில் ஒரு நிமிடத்துக்கு மேல் கரகோஷம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலான நிலையில், ரஜினி ரசிகர்கள் மத்தியில் நடிகர் எஸ்ஜே சூர்யாவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முதல் முதலில் ஜப்பான் மக்களிடம் அறிமுகமான நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அவர் நடித்த முத்து படம்தான் ஜப்பான் மக்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட தமிழ் படம்.

அதன்பிறகு இன்று வரை ரஜினியின் புதிய படங்களை, ஜப்பானிய மக்கள் குடும்பத்துடன் தமிழ்நாட்டுக்கு வந்து பார்த்துச் செல்வது வழக்கமாக உள்ளது. ரஜினிக்கு ஜப்பான் மக்கள் மத்தியில் டான்சிங் மகராஜ் என்ற பெயரும் உண்டு. இன்றும் அவரது படங்கள் ஜப்பானில் ரிலீஸாகின்றன. ரஜினியை விட நடிகர்கள் விஜயும் விஜய் சேதுபதியும் ஜப்பானிய மக்கள் மத்தியில் புகழ் பெற வாய்ப்பே இல்லை. எஸ்ஜே சூர்யா ரஜினியை மறந்து விட்டாரா, அல்லது வேண்டும் என்றே ரஜினி பெயரை சொல்லாமல் மறுத்தாரா என்ற கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்