இயக்குனர் சுசீந்திரன் இயக்குனராக அறிமுகமான படம் வெண்ணிலா கபடிக்குழு. இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார். மேலும் இந்த படத்தில் சரண்யா மோகன் கிஷோர் ஸ்ருதிகா அப்புக்குட்டி சூரி உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் குள்ள நரிக்கூட்டம் பலே பாண்டியா நீர்ப்பறவை முண்டாசுப்பட்டி இன்று நேற்று நாளை ராட்சசன் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் கட்டாகுஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார். இப்போது அவரது தம்பி ருத்ராவும் நடிக்க வந்துவிட்டார்.
இதற்கிடையே நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் சுசீந்திரன் கூறியதாவது, வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த போது விஷ்ணு விஷாலுக்கு தமிழே சுத்தமாக பேச வரலே. பிரண்ட்ஸ் சர்க்கிள் எல்லாம் இங்கிலீஸ். வீட்டுல எல்லாம் இந்தி. ஆனால் தமிழ்நாட்டில் வளர்ந்த பையன். அதனால் விஷ்ணு விஷாலை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
அப்புறம் 3, 4 மாதங்கள் தொடர்ந்து படத்துக்கு ஹீரோ தேடிக்கிட்டே இருக்கோம். நாங்களும் ஒவ்வொருத்தரா பார்க்கறோம். யாரை சொன்னாலும் புரடியூசர் வேண்டாம் வேண்டாம் என்றே சொல்லிட்டு இருக்கிறார். அப்புறம் பைனலா ஒரு விஷயத்தை என்கிட்ட ஓபனா சொல்லிட்டார்.
சுசீ, பைனான்சியலா என் பிரண்ட்ஸ் எல்லாம் எனக்கு சப்போர்ட் பண்றாங்க. மீதி பேலன்ஸ் அமௌண்ட் விஷ்ணு விஷாலோட அப்பா, அவரோட பிரண்ட் சப்போர்ட் பண்றேன்னு சொல்றாங்க. அது இருந்தா தான் நாம படம் பண்ண முடியும் என்று வெளிப்படையாக சொல்லி விட்டார்.
என்னை நம்பி என் வீட்டுல 1000 ரூபா தர்ற அளவுக்கு வசதி கிடையாது. மறுபடி என்னை நம்பி ஒரு புரடியூசர் 2 கோடி பணம் போடுவாரான்னு தெரியாது. கிடைச்ச தயாரிப்பாளரை மிஸ் பண்ண வேண்டாம் ட்ரை பண்ணுவோம். இந்த பையனை நமக்கு எப்படி மாத்த முடியுமோ அப்படி மாத்துவோம் என்று விஷ்ணு விஷாலை மாத்தி நடிக்க வெச்சோம் என்று இயக்குனர் சுசீந்திரன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





