- Advertisement -
Homeபொழுதுபோக்குஏவிஎம் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த இயக்குனர் டி ராஜேந்தர் - வரும் ஏப்ரல் 20ம்...

ஏவிஎம் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த இயக்குனர் டி ராஜேந்தர் – வரும் ஏப்ரல் 20ம் தேதிக்குள் பதிலளித்த கோர்ட் உத்தரவு!

- Advertisement -

கடந்த 1980 90களில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் டி ராஜேந்தர். அவர் இயக்கிய பல படங்களில் அவரே ஹீரோவாக நடித்தார். மேலும் இசையமைப்பாளர் பாடல் ஆசிரியர் பாடகர் கதை திரைக்கதை வசனம் என பலதரப்பட்ட விஷயங்களையும் டி ராஜேந்தரே கவனித்துக்கொள்வது வழக்கம். அதனால் அவரை அஷ்டவதானி என்று ரசிகர்கள் அழைத்தார்கள்.

அதே போல் தமிழ் சினிமாவில் மிகவும் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் புரடக்சன்ஸ் நிறுவனம். எம்ஜிஆர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த பல வெள்ளிவிழா படங்களை தயாரித்த இந்நிறுவனம் இன்றும் தமிழ் சினிமாவில் பேர் சொல்லும் முக்கிய நிறுவனமாக உள்ளது.

- Advertisement -

நடிகர் டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான படம் உயிருள்ள வரை உஷா. இந்த படத்தை அவரே தயாரித்து இசையமைத்தும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது கடந்த 1983ம் ஆண்டு வெளியான உயிருள்ள வரை உஷா படம் கடந்த பிப்ரவரி மாதம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தின் பாடல்களின் உரிமம் ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்தது. பின்னர் அந்த உரிமத்தை டபிள்யூ எல் எபிக் மீடியா என்ற நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் உயிருள்ள வரை உஷா படத்தின் பாடல்கள் பதிப்புரிமையை மீறி வர்த்தக ரீதியாக பயன்படுத்த ஏவிஎம் மற்றும் டபிள்யூ எல் எபிக் மீடியா ஆகிய நிறுவனங்களுக்கு தடை விதிக்க கோரி இயக்குனர் டி ராஜேந்தர் அவரது மனைவி உஷா ராஜேந்தர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

- Advertisement -

வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் ஏப்ரல் 20 ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு ஏவிஎம் நிறுவனம் மற்றும் டபுள் யு எல் எபிக் மீடியா ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார். வழக்கமாக இசையமைப்பாளர் இளையராஜா தான் தனது இசை பாடல்கள் காப்பிரைட் கேட்டு கோர்ட்டுக்கு செல்வது வழக்கமாக உள்ளது.

இப்போது அந்த வரிசையில் இயக்குனர் நடிகர் டி ராஜேந்தரும் இணைந்து விட்டாரா என்று ரசிகர்கள் பலரும் ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இயக்குனர் டி ராஜேந்தர் பணத்துக்காக புகழுக்காக மட்டுமே இதுபோன்ற வழக்குகளை தொடர வாய்ப்பில்லை. இது சார்ந்த முக்கிய பிரச்னை எதுவும் இதற்கு மறைமுக காரணமாக இருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்