- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி சொல்வது இப்போது டிரண்ட் ஆகி விட்டதா? - விமர்சனத்தில் சிக்கிய பிரபல இயக்குனர்கள் -...

இப்படி சொல்வது இப்போது டிரண்ட் ஆகி விட்டதா? – விமர்சனத்தில் சிக்கிய பிரபல இயக்குனர்கள் – ஒருவேளை சினிமா வியாபாரிகளாக ஜெயித்து விட்டார்களா?

- Advertisement -

சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு சென்னைக்கு வந்து போராடி ஜெயித்தவர்கள் 10 பேர் என்றால், கடைசி வரை போராடி தோற்றவர்கள் 1000 பேர் இருக்கின்றனர். அதே போல் இயக்குனராக ஆசைப்பட்டு சென்னைக்கு வந்தவர்களில், 20, 30 ஆண்டுகள் ஆகியும் இன்னும் உதவி இயக்குனர்களாகவே போராடிக் கொண்டிருப்பவர்களும் ஏராளமாக உள்ளனர்.

ஆனால் மிக சுலபமாக இயக்குனராகி சில வெற்றிப் படங்களை தந்தவர்கள் உடனே நான் சினிமாவை விட்டு விலகப் போகிறேன் என்று சொல்வது இப்போது டிரண்டிங் ஆக மாறிக்கொண்டு இருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நேரடி இயக்குனராக அறிமுகமானவர்.

இவர் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இல்லை. அப்படி பலரிடம் உதவி இயக்குனராக போராடியிருந்தால் ஒரு இயக்குனராக தகுதி பெறுவதில் எத்தனை போராட்டங்கள் இருக்கிறது என்பதை நேரடியாக அனுபவித்து உணர்ந்திருப்பார். மாநகரம் படம் தந்த அபார வெற்றியும் அடையாளமும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை உருவாக்கி தந்தன.

கைதி விக்ரம் மாஸ்டர் லியோ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்த இப்போது ரஜினி நடிப்பில் கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ரத்தம் வன்முறை அடிதடி துப்பாக்கி என இவர் ஒரு கமர்ஷியல் டைரக்டர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 10 படங்கள் மட்டுமே இயக்குவேன், பிறகு சினிமாவை விட்டு போய் விடுவேன் என்கிறார்.

அதே போல் சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் 1 நேர்கொண்ட பார்வை வலிமை துணிவு படங்களை இயக்கிய இயக்குனர் எச் வினோத், இப்போது விஜய் நடிப்பில் ஜனநாயகன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இவரும் 12 படங்கள்தான் டைரக்ட் செய்வேன். அதன்பிறகு விவசாயம் பார்க்க போய்விடுவேன் என்கிறார். ஆனால் இவர் கமர்ஷியல் டைரக்டராக இருந்தாலும் கருத்தாழம் மிக்க சமூக படங்களை தரும் ஒரு படைப்பாளியாக இருக்கிறார்.

இதற்கிடையே இயக்குனர் மற்றும் நடிகர் மிஷ்கின், விரைவில் தமிழ் சினிமாவை விட்டு போய் விடுவேன் என்கிறார். இவரும் ரத்தம் வன்முறை என ரத்தக்களறி படங்களை தரும் ஒரு இயக்குனர்தான். எச் வினோத் தவிர மற்ற 2 இயக்குனர்களும் சினிமாவை விட்டு போவதால் ரசிகர்களுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. அதே நேரத்தில் சினிமாவுக்குள் வர இயக்குனராக பலரும் போராடிக் கொண்டு இருக்கும் போது, இவர்கள் தானாகவே சினிமாவை விட்டு விலகுவேன் என்று அறிவிப்பது, நினைத்ததை விட பல கோடிகள் சம்பாதித்து விட்டோம், சினிமா வியாபாரத்தில் கொழுத்த லாபம் கிடைத்து விட்டது என்ற மன நிறைவுதான் காரணமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சற்று முன்