நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இப்போது எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கிறார்.
இப்போதைக்கு தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கும் விஜய் ஒரு படத்துக்கு ரூ. 250 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இன்னும் 20 ஆண்டுகளுக்கு மேல் அவர் சினிமாவில் நீடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென கடந்தாண்டில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற பல ஆண்டுகளாக எதிர்பார்த்த நிலையில் அதற்கு நேர்மாறாக நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் இயக்கத்தை திடீரென ஆரம்பித்தார். விஜய் எல்லாம் அரசியல் பக்கமே வரமாட்டார் என பலரும் நினைத்திருந்த நிலையில் விஜயும் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார்.
தமிழக மக்கள் மத்தியில் நடிகர் விஜய்க்கு அரசியல் தலைவராக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிமுக திமுக என்ற 2 திராவிட கட்சிகளுமே மாறி மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்வதால் வெறுத்துப் போன மக்கள், மாற்று அரசியலை எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் புதிய கட்சி ஆட்சி அமைத்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் விஜய் அரசியலுக்கு வந்ததை பலரும் வெளிப்படையாக எதிர்க்கவும் செய்கின்றனர். நடிகர் விஜயை கடுமையாக விமர்சிக்கின்றனர். சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக கட்சியில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, தொடர்ந்து மேடைகளில் நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் திவ்யா சத்யராஜ் பேசியதாவது, நடிகர் சூர்யா அகரம் பவுண்டேசன் மூலம் எத்தனையோ மாணவர்களை படிக்க வெச்சுட்டு இருக்கார். அதனால் சூர்யா அண்ணா அரசிலுக்கு வந்தால் அவருக்கு அதற்கான முழுமையான தகுதி இருக்கு. ஆனால் விஜய் சாருக்கு என்ன தகுதி இருக்கு? அவரோட கனவு ஆசை எல்லாமே முதல்வர் நாற்காலியை நோக்கிதான் இருக்கு. மக்கள் பிரச்னைகளை நோக்கி இல்லை என்று திவ்யா சத்யராஜ் கடுமையாக பேசியிருக்கிறார்.





