- Advertisement -
Homeபொழுதுபோக்குதிரையரங்குகளில் மட்டுமல்ல ஓடிடி தளத்திலும் ஒரே நாளில் மோதப்போகும் இரண்டு திரைப்படங்கள்... இருந்தாலும் அந்தப் படத்திற்கு...

திரையரங்குகளில் மட்டுமல்ல ஓடிடி தளத்திலும் ஒரே நாளில் மோதப்போகும் இரண்டு திரைப்படங்கள்… இருந்தாலும் அந்தப் படத்திற்கு தைரியம் கொஞ்சம் ஜாஸ்திதான் போல…

- Advertisement -

நடப்பாண்டு தமிழ் சினிமாவில் ரிலீசான திரைப்படங்களிலேயே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் என்பது மிக மிகக் குறைவு தான். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான மதகஜராஜா திரைப்படம், ரேசில் முந்திக்கொண்டு முதல் பரிசை தட்டி சென்றது.

அதுவும் 2013 ஆம் ஆண்டு மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், 12 வருடங்களுக்குப் பிறகு ரிலீஸ் செய்யப்பட்டு, ஜாக்பாட் அடித்தது. இதன் பிறகு மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது. சொல்லப்போனால் இதன் மூலம் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார் மணிகண்டன்.

தொடர்ந்து பலரும் எதிர்பார்த்திருந்த அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி அவரது ரசிகர்களுக்கே சோதனையாக அமைந்தது. வலுவில்லாத திரைக்கதை மற்றும் மாஸ் காட்சிகள் இல்லாதது ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்தது. இருப்பினும் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் பெரிய பின்னடைவை சந்திக்கவில்லை என்றே கூறுகிறார்கள்.

படம் வெளியான முதல் நான்கு நாட்களில் நல்ல வசூல் கிடைத்ததாகவும் சினிமா விநியோகஸ்தர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இதன் பிறகு வெளியான டிராகன் திரைப்படம் இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த காவியமாக மாறியது. பிரதீப் ரங்கநாதன் இதில் ஹீரோவாக நடிக்க அஸ்வந்த் மாரிமுத்து இயக்கியிருந்தார்.

படத்தில் கன்டென்ட் மிக ஸ்ட்ராங்காக இருந்ததால், அனைத்து தரப்பிலும் இந்த திரைப்படம் ரீச் ஆனது. திரைக்கதையும் தன்னால் எந்த அளவுக்கு சுவாரசியமாக கொடுக்க முடியுமோ அதனை கச்சிதமாக செய்திருந்தார் அஸ்வந்த் மாரிமுத்து. இதன் காரணமாக, 37 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 150 கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.

டிராகன் திரைப்படத்துடன் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் அந்த அளவு விமர்சனத்தை பெறவில்லை. தனுஷின் இயக்கத்தில் இது வெளிவந்திருந்தாலும், பலரையும் இந்த திரைப்படம் கவரவில்லை. இப்படியான சூழலில், இந்த இரண்டு திரைப்படங்களும் மீண்டும் ஒருமுறை நேருக்கு நேர் மோத இருக்கின்றன. ஆனால் இந்த முறை திரையரங்குகளில் அல்ல ஓடிடி தளத்தில். இந்த இரு படங்களும் வரும் 21 ஆம் தேதி ஓடிடியில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்