- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் அவர்களை வீட்டை விட்டு விரட்டி விட்டாரா? உண்மையில் நடந்தது என்ன? - வெளிச்சத்துக்கு...

நடிகர் விஜய் அவர்களை வீட்டை விட்டு விரட்டி விட்டாரா? உண்மையில் நடந்தது என்ன? – வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக ஜனநாயகன் படம் வெளிவர இருக்கிறது. இது அவரது 69வது படம். இந்த படத்துக்கு பிறகு இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் விஜய் ஏற்கனவே அறிவித்து விட்டார். ஏனெனில் அவர் தமிழக வெற்றிக் கழகம் என்று அரசியல் இயக்கத் தலைவராக அரசியல் களத்தில் குதித்திருக்கிறார்.

நடிகர் விஜய் கடந்த 32 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். அவருக்கு என மேக்கப் மேன் ஹேர் டிரஸ்சரர் பாதுகாவலர் டிரைவர் தனி உதவியாளர்கள் என பலர் பல ஆண்டுகளாக அவரிடம் பணியில் இருந்து வருகின்றனர். அவர்கள் விஜய்க்கு சொந்தமான வீடுகளில் வாடகை இல்லாமல் பல ஆண்டுகளாக வாடகையின்றி குடும்பங்களாக வசித்து வருகின்றனர்.

- Advertisement -

பொதுவாக பெரிய கோடீஸ்வரர்கள், சினிமா நட்சத்திரங்கள் தங்களது ஊழியர்களுக்காக வீடுகளை கட்டிக் கொடுப்பது, வாடகையின்றி அவர்கள் எவ்வளவு ஆண்டுகள் வேண்டுமானாலும் அங்கு வாழ அனுமதிப்பது நடக்கிற விஷயம்தான். ஆனால் இதை எல்லோருமே செய்வதில்லை. இதற்கும் ஒரு தாராள மனம் வேண்டும்.

அப்படி விஜயிடம் பணிபுரிந்த பலரும் இப்போது அவருக்கு சொந்தமான வீடுகளில் குடும்பமாக வசித்து வருகின்றனர். விஜய் இப்போது அரசியலுக்கு வந்துவிட்டார். இனிமேல் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று ஏற்கனவே அவர் அறிவித்து விட்டார். ஆனாலும், சினிமா சார்ந்த அந்த ஊழியர்களை, அவர்கள் குடும்பங்களை விஜய் தனது வீட்டை விட்டு காலி பண்ண சொல்லவில்லை.

- Advertisement -

அதே நேரத்தில் ஒரு பெண்மணி மட்டும் அந்த வீட்டை விட்டு சமீபத்தில் காலி செய்திருக்கிறார். அதனால் நடிகர் விஜய் தனது வீடுகளில் வசித்து வரும் அந்த ஊழியர் குடும்பங்களை எல்லாம் காலி பண்ணச் சொல்லி விட்டார் என்ற தவறான பொய்யான தகவல் பரவி வருகிறது. ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

விஜயிடம் பணிபுரிந்த ஊழியர்களில் பலரும் இப்போது வேறு படங்களில் வேறு நடிகர்களுக்கு பணிசெய்து வருகின்றனர். ஆனாலும் நடிகர் விஜய் அவர்களை தனது வீட்டை விட்டு செல்ல வேண்டும் என்று கூறவே இல்லை. மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க வந்தாலும் வராவிட்டாலும் இத்தனை காலமாக சினிமாவில் தனது வளர்ச்சிக்காக தன்னுடன் இருந்த அவர்களை அதே வீட்டில் வசிக்க அனுமதித்திருக்கிறார். அவர் யாரையும் வீட்டை காலி செய்யச் சொன்னதே இல்லை என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்