- Advertisement -
Homeபொழுதுபோக்குபுரட்சித் தலைவர் எம்ஜிஆர் பட டைட்டிலில் வந்த படம், எங்கள் தங்கம் எப்படி இருக்குது? மீண்டும்...

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பட டைட்டிலில் வந்த படம், எங்கள் தங்கம் எப்படி இருக்குது? மீண்டும் தமிழில் ஒரு ரவுண்டு வருவாரா நடிகை சமந்தா?

- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. யசோதா சாகுந்தலம் திரைப்படங்களுக்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்திருந்த நடிகை சமந்தா இப்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள படம் மா இண்டி பங்காரம். இந்த படம் எங்கள் தங்கம் என்ற பெயரில் தமிழ் டப்பிங்கில் வெளியாகி உள்ளது.

எங்கள் தங்கம் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஜெயலலிதா இணைந்து நடித்த ஒரு படத்தின் டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்த ஓ பேபி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், எங்கள் தங்கம் படத்தின் மீதும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

- Advertisement -

எங்கள் தங்கம் படத்தின் கதை இதுதான். அனிருத் மற்றும் ஸ்வர்ணா காதலித்து திருமணம் செய்துக்கொண்டு குடும்பத்திலிருந்து விலகி வாழ்கின்றனர். 3 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கையின் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு ஸ்வர்ணா ஊருக்கு செல்லும்போது சுவர்ணாவை பார்க்கும் ஒருவர் அவர் ஜான்சி போல இருப்பதாக சந்தேகப்படுகிறார்.

உண்மையில் ஜான்சி என்பவர் யார்? ஸ்வர்ணாவும் ஜான்சியும் ஒரே நபர்தானா? முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்பின் தலைவர் கருணாவுடன் அவருக்கு என்ன தொடர்பு என்பதுதான் படத்தின் கதையாக உள்ளது. ஜான்சி மற்றும் ஸ்வர்ணா என்ற இரட்டை கதாபாத்திரங்களில் நடிகை சமந்தா அருமையாக நடித்துள்ளார். காமெடி காட்சிகளில் இயல்பான முகபாவனைகளும் சண்டை காட்சிகளில் வெளிப்படுத்திய உடல் மொழியும் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது.

- Advertisement -

வில்லன் கேரக்டரில் குல்ஷன் தேவய்யா தனது நடிப்பின் மூலம் தனி கவனத்தை பெறுகிறார். இந்த கேரக்டருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் தனது நடிப்பால் நல்ல தாக்கத்தை ரசிகர்களிடம் அவர் ஏற்படுத்தி உள்ளார். படத்தின் முதல் பாதியில் குடும்பத்தின் உணர்வுகள் இயல்பான காமெடி மற்றும் மர்மம் ஆகியவற்றுடன் படம் விறுவிறுப்பாக நகர்கிறது. கதாநாயகியை சுற்றியுள்ள புதிர்கள் ரசிகர்களின் ஆர்வத்தை தொடர்ந்து தூண்டுகின்றன. ஆனால் இடைவேளைக்கு பிறகு படம் வழக்கமான பாதையில் பயணிக்கிறது.

பெரிய திருப்பங்கள் இல்லாமல் கதாநாயகிக்கும் வில்லன்களுக்கும் இடையிலான மோதலாக கதை நகர்வதால் முதல் பாதியில் உருவான எதிர்பார்ப்பு இரண்டாம் பாதியில் முழுமையாக பூர்த்தியாகவில்லை. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. முதல் பாதி படம் ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைக்கும். ஆனால் 2ம் பாதியில் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் எங்கள் தங்கம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறி இருக்கும்.

- Advertisement -

சற்று முன்