ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் கேரக்டர் பெயர் கூட இல்லாமல் பத்து பேரில் ஒருவராக நடித்தவர்தான் விஜய் சேதுபதி. வெண்ணிலா கபடிக்குழு புதுப்பேட்டை உள்ளிட்ட சில படங்களில் அவர் ஓரிரு காட்சிகளில் மட்டுமே முகம் காட்டியிருப்பார். பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
அதன்பிறகு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ரம்மி பண்ணையாரும் பத்மினியும் பீட்சா இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா சூது கவ்வும் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார். இப்போது விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்களில் ஒருவராக முன்னணியில் இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் வில்லனாகவும் திறமை காட்ட ஆரம்பித்தார். குறிப்பாக விக்ரம் பேட்ட மாஸ்டர் போன்ற படங்களில் கமல் ரஜினி விஜய் போன்றவர்களுக்கு வில்லனாக நடித்தார். பிறகு இந்தியில் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார். ஆனால் இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என்றும் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
இதற்கிடையே விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை 7 ஆண்டுகளாக தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் விலகிய நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணிசெய்து வருகிறார். இப்போது மணிரத்னம் இயக்கும் ஒரு புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கமிட் ஆன நிலையில் அவருக்கு ஜோடியாக நாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் ஒரு படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தில் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில் இப்போது 2வது ஷூட்டிங் ஷெட்யூல் துவங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் சேதுபதி இப்போது பங்கேற்று நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கேரக்டரில் நடிப்பது உறுதியாகி உள்ளது. மொத்தம் 20 நாட்கள் மட்டுமே இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கால்ஷீட் தந்திருக்கிறார். ஆனால் அவரது சம்பளம் ரூ. 20 கோடி பேசப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்ற ரீதியில் சம்பளம் வாங்குகிறார். ரொம்பவும் காஸ்ட்லியான வில்லனாக மக்கள் செல்வன் மாறிவிட்டார் என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.





