- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த ஸ்கூல்ல படிச்சதால தான் நான் அப்படி ஆனேன், என் மாமா ஆசைப்பட்டதும் நிறைவேறியது -...

அந்த ஸ்கூல்ல படிச்சதால தான் நான் அப்படி ஆனேன், என் மாமா ஆசைப்பட்டதும் நிறைவேறியது – பிரபல நடிகர் சொன்ன சூப்பர் தகவல் இது

- Advertisement -

சினிமா நடிகர்களில் சிலரது நடிப்பு மிக இயல்பாக இருக்கிறது. ஒரு சிலரது நடிப்பு, திரையில் அப்பட்டமாக தெரியும். கேரக்டருக்கு தகுந்தபடி தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு கேமரா முன் நிற்க ஒரு சிலரால் மட்டுமே முடியும். நடிகர்கள் கமல், கார்த்திக், நாசர், விக்ரம், பசுபதி என்ற வரிசையில், தற்கால நடிகர்களில் குரு சோம சுந்தரத்தை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

சொற்ப எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே அவர் நடித்திருந்தாலும், கூத்துப்பட்டறையில் இருந்து வந்தவர் என்பதால், அவரது நடிப்பு மிக யதார்த்தமாக இருக்கும். குரலில், கண் அசைவுகளில், உடல்மொழியில் அவரது சிறந்த நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்து வருகிறது. நல்ல கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

ஆரண்ய காண்டம் தான் குரு சோமசுந்தரம் நடித்த முதல் படம். கடல், ஜிகர்தண்டா, குக்கூ, தூங்காவனம், 49 ஓ, குற்றமே தண்டனை, பாம்பு சட்டை, கொலைகாரன், பேட்ட, பாண்டிய நாடு, வஞ்சகர் உலகம், மாமனிதன் என பல படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

இதில் அவருக்கு மிக முக்கியமான படமாக அமைந்த படம் ஜோக்கர். ராஜூ முருகன் இயக்கத்தில், 2016ம் ஆண்டில் வெளிவந்த இந்த படம், மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ரம்யாபாண்டியன், குரு சோமசுந்தரத்தின் மனைவியாக நடித்திருப்பார். மனநலம் பாதிக்கப்பட்ட மக்கள் ஜனாதிபதியாக குரு சோமசுந்தரம் மிகச்சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தி,ரசிகர்களின் பாராட்டை பெற்ற படம் இது.

- Advertisement -

இந்த படம் குறித்து சமீபத்தில் ஒரு சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார் குரு சோமசுந்தரம். நேர்காணல் ஒன்றில் அவர் கூறியதாவது, பட்டுக்கோட்டை அருகில் உள்ள பேராவூரணி தான், என் அம்மாவின் ஊர். அங்கு நான் ஏழாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன்.அப்போது, திடீரென எங்க மாமா உன்னை அடுத்த வருஷம் ஹாஸ்டலில் சேர்க்கப் போகிறேன் என்று கூறிவிட்டார். பேராவூரணியில் இருந்து, 20 கிமீ தூரத்துல இருக்கிற ராஜாமடம் என்ற ஊரில் இருக்கிற ஸ்கூலுக்கு என்னை மாமா சேர்த்துவிட்டார்.

குறிப்பாக, அந்த ஸ்கூலில் என்னை ஏன் மாமா சேர்த்துவிட்டாருன்னு கேட்டால், அந்த ஸ்கூல் நமது இந்திய நாட்டின் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் படிச்ச ஸ்கூல். அவர் பிறந்த ஊர், படிச்ச ஸ்கூல் அதுதானாம். அதனால், நானும் அந்த ஸ்கூல்ல படிச்சா, ஜனாதிபதி ஆயிடுவேன்னு மாமா ஆசைப்பட்டிருக்கிறார். ஜோக்கர் படம் வந்த பிறகு, மாமாவுக்கு நான் போன் பண்ணி சொன்னேன். மாமா, நீங்க நெனைச்ச மாதிரியே நான் நிஜமாவே ஜனாதிபதி ஆயிட்டேன், ஜோக்கர் படத்தை போய் பாருங்க, என்று, நகைச்சுவையாக கூறி இருக்கிறார் நடிகர் குரு சோமசுந்தரம்.

- Advertisement -

சற்று முன்